11 | பொய்யாமை நுவலுநின் 1செங்கோலச் செங்கோலின் செய்தொழிற்கீழ்ப் பட்டாளோ விவளிவட் 2காண்டிகா காம3 நோய் கடைக்கூட்ட வாழுநாண் முனிந்தாளை |
எ - து: (1)நினது 4செங்கோலினுடைய உயர்ந்த நடுவுநிலைமை தப்பாமையை உலகம் புகழ்ந்து கூறாநிற்கும்; அந்தச் செங்கோலினுடைய இனிய செய்தொழிலுக்குக் கீழாகிய கொடுந்தொழிலின்கண்ணே இவள் அகப்பட்டாளோ? அதிற்பட்டவளல்லள்; இங்ஙனம் காமநோய் இறந்துபாட்டைச் சேர்த்துகையினாலே தான் உயிர்வாழும் 5நாளை வெறுத்த இவளை இவ்விடத்தே அருளிப்பாராய். எ - று. 14 | எமமென் றிரங்குநின் னெறிமுரச மம்முரசி 6னேமத் திகந்தாளோ விவளிவட் 7காண்டிகா வேய்நல மிழந்ததோள் கவின்வாட விழப்பாளை |
எ - து: நின்னுடைய எறிகின்ற முரசம் இவ்வுலகத்திற்குக் காவலென்று கூறும்படியாக ஒலியாநிற்கும்; அந்த முரசினது காவலினின்றும் இவள் நீங்கினாளோ? நீங்கினவளல்லள்; இங்ஙனம் மூங்கில் தன்னலனிழத்தற்குக் காரணமான தோள் பழைய அழகுகெடும்படி வருந்துகின்ற 8இவளை இவ்விடத்தே அருளிப்பாராய். எ - று. ஓகாரங்கள், எதிர்மறை. ஆங்கு, அசை. 18 | நெடிதுசே ணிகந்தவை காணினுந் தானுற்ற (2) 9வடுக்காட்டக் கண்காணா தற்றாக வென்றோழி |
இ - வி. சூ. 277. இவற்றிலும் "புறநிழற்.....................காண்டிகா" என்பது தொல். இடை. சூ. 31. சேனா; நச். சூ. 30. ‘யாகா’ தெய்வச். நன். இடை. சூ. 22. இரா; இவற்றிலும் மேற்கோள். 1. "நடைதனக்குக், கோடாமொழிவனப்புக் கோற்கதுவே" சிறுபஞ்ச. 7. என்பதும். "தெரிவுகொள்செங்கோல் அரசரென்பதனான் அரசரெல்லாம் தந்நாட்டு நன்றுந்தீதும் ஆராய்ந்து அதற்குத்தக்க தண்டஞ்செய்தற்கு உரிமையும் அதுவெனக்கொள்க" (தொல். மரபு. சூ. 71. பேர்) என்பதும் இங்கே அறிதற்பாலன. 2. (அ) "தன்வழிக் குற்றங் காணாக் கண்ணெனத் தான்செய் குற்ற முன்னிடா தவனைக் கோபித்து" மேருமந்தர. 263. என்பதும், (பிரதிபேதம்)1செங்கோலைச் செங்கோலின், 2கண்டிகா, 3நோய்க்கடைக் கூட்ட, 4செங்கோலினையுடைய, 5நாள்வெறுத்த, 6ஏமத்தினிகந்தாளோ, 7கண்டிகா, 8இவளையருளிப்பாராய், 9வடுக்காட்டிற்கண்.
|