தொடிகொட்ப நீத்த கொடுமையைக் கடிதென வுணராமை கடிந்ததோ நினக்கே எ - து: கண் 1சேணெடிதாக நீங்கின பொருள்களைக் காணினும் தான் தன்னிடத்தே உற்ற வடுவைப் பிறர்காட்டவுங் காணாத தன்மைத்தாக 2என்னுடையதோழியினது தொடிகள் சுழன்று கழலும்படியாக நீ கைவிட்ட கொடுமையை நீகடிதென்று உணராதிருத்தல் நினக்குச் (1) சான்றோராற் கடியப்பட்டவற்றில் 3ஒன்றோ! அஃதின்றேயென்றான். எ - று. இதனைக் (2) கைக்கிளையென்பார்க்குச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாது நிற்றலிற் கைக்கிளை 4யாகாதெனவும், இதனைக் (3) குறுங்கலியென்பார்க்கு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறாமையின் அப்பெயர் 5பொருந்தாதெனவுங் கூறி மறுக்க.
(ஆ) "காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா, வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (இ) "கற்ற கல்வியுங் கண்ணகத் தஞ்சனம் புறத்தே, யுற்ற வொண்பொருள் விளக்கியுண் கண்ணினுக் குதவாப், பெற்றி யொப்புற" என வடுவினிலையில் அஞ்சனத்தையும் சேனிகந்த வற்றினிலையில் பிறபொருளையும் நிறுவி ஒருவாறாக அமைத்திருத்தலும் இங்கே அறிதற்பாலன. 1. "கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா, முடிந்தாலும் பீழைதரும்" என்பது இங்கே அறிதற்பாலது. குறள். 668. 2. ‘கலிவெண் பாட்டே’ என்னுஞ் சூத்திர வுரையில், "அறனிழல்........................ விதுப்புற்றாளை" என்பதை மேற்கோள் காட்டி, இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை வந்ததாலெனின், அற்றன்று; தலைமகன் அன்பின்மை மெய்யாகினன்றே அன்னதாவது; இஃது அன்னதின்றி ஊடல் காரணமாக அன்பிலனென்று இல்லது சொல்லினமையின் இஃதொருதலை யன்பாகாதென்பர் பேராசிரியர்; தொல். செய். சூ. 160; நச்சினார்க்கினியரும் இதனையே தழுவி யெழுதுவர். 3. குறுங்கலியென்பது அகப்புறத்திணையுளொன்றாகிய பெருந்திணையின் துறை பத்தனுள் ஒருதுறையென்று வீரசோழிய உரையாலும் அத்திணையில் அத்துறையில் "நாறிருங் கூந்தன் மகளிரை நயப்ப, வேறுபடு வேட்கை வீயக் கூறின்று" என்று புறப்பொருள் வெண்பாமாலை யாலும் தலைவனால் துறக்கப்பட்ட தலைவியை அவனொடு கூட்டல் வேண்டிச் சான்றோர் அவன்பாற் கூறுவதென்று புறநானூற்றுரை யாலும் அறியப்படுகிறது. (பிரதிபேதம்) 1 கண்கள், 2என்னுடைய தொடிகள், 3ஒன்றே வன்றே என்றாள், 4ஆகாது இதனைக்குறுங்கலி யென்றல் அகத்தியனாரும், 5பொருந்தாது. இது ஏழடி.
|