பக்கம் எண் :

நான்காவது முல்லை617

திருமால் துணை.

கலித்தொகை
மூலமும்
நச்சினார்க்கினியருரையும்.
நான்காவது முல்லைக்கலி.

(101).தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று
முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமுங்
களிபட்டா னிலையேபோற் றடவுபு துடுப்பீன்று
ஞெலிபுட னிரைத்த ஞெகிழிதழ்க் கோடலு
5மணிபுரை யுருவின காயாவும் பிறவு
மணிகொள மலைந்த கண்ணியர் தொகுபுடன்
மாறெதிர் கொண்டதம் மைந்துட னிறுமார்
சீறரு முன்பினோன் கணிச்சிபோற் கோடுசீஇ
யேறுதொழூஉப் புகுத்தன ரியைபுட னொருங்கு;
10அவ்வழி. முழக்கென விடியென முன்சமத் தார்ப்ப
வழக்குமாறு கொண்டு வருபுவரு பீண்டி
நறையொடு துகளெழ நல்லவ ரணிநிற்பத்
துறையு மாலமுந் தொல்வலி மராஅமு
முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ;
15மேற்பாட் டுலண்டி னிறனொக்கும் புன்குருக்க
ணோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் றோற்றங்கா