| ணஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியா னெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்; |
21 | சுடர்விரிந் தன்ன சுரிநெற்றிக் காரி விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக் குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் றோற்றங்காண் படரணி யந்திப் பசுங்கட் கடவு ளிடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக் குடர்கூளிக் கார்த்துவான் போன்ம்; |
27 | செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக் கதனஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்கா ணாரிரு ளென்னா னருங்கங்குல் வந்துதன் றாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றானைத் தோளிற் றிருகுவான் போன்ம்; எனவாங்கு; |
34 | அணிமாலைக் கேள்வற் றரூஉமா ராயர் மணிமாலை யூதுங் குழல்; |
36 | கடாஅக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை விடாஅதுநீ கொள்குவை யாயிற் படாஅகை யீன்றன வாயமக டோள்; |
39 | பகலிடக் கண்ணியன் பைதற் குழலன் சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங் கூந்த லணைகொடுப்பேம் யாம்; |
43 | கோளாள ரென்னொப்பா ரில்லென நம்மானுட் டாளாண்மை கூறும் பொதுவ னமக்கொருநாட் கோளாள னாகாமை யில்லை யவற்கண்டு வேளாண்மை செய்தன கண்; |