எ - து: ஆயர் ஈண்டு ஊதுகின்ற குழல் நீலமணிபோலுங் காயாம்பூவாற் செய்த மாலையினை அணியும் இயல்பினையுடைய கேள்வனை நமக்குத் தருதற்கு நன்னிமித்தமாக இசைத்தது காண்; நீ அஞ்சாதேகொள்ளென்றாள். எ - று. அது, மங்கலமான பண்ணைத் தருதலின் நிமித்தமாயிற்று. 36 கடாஅக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை விடாஅதுநீ 1கொள்குவை யாயிற் படாஅகை யீன்றன 2வாயமக டோள் எ - து: தோழி, தலைவனிடத்தே சென்று ஆண்டுச்செய்த நிமித்தத்தை ஆராய்ந்துபார்க்கில், மதத்தையுடைய களிற்றினுங்காட்டிற் றறுகண்மையை யுடைய ஏற்றை நீ கைநெகிழவிடாது கொள்வை; இப்பொழுது இவ்வாய மகள் 3தோள் ஏனைமகளிர் தோள்களிற்காட்டில் 4வெற்றிக்கொடியை உண்டாக்கினவா மென்றாள். எ - று. 39 பகலிடக் கண்ணியன் பைதற் குழலன் சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங் கூந்த லணைகொடுப்பேம் யாம் எ - து: பின்னர்த் தலைவியிடத்தே வந்து எம்முடைய பலவான கரிய கூந்தலினையுடையவளை யாம் கூடுதற்குக் கொடுப்பேம்; கொல்லேற்றைச் சாடு தற்குச்சமைந்திருந்தவர்களுக்கென்று 5நமர்கூறி, கூற்றும் தலைவனையொழிந்த பகற்பொழுதிலே அலர்ந்த கண்ணியையுடையவன் வருத்தத்தையுடைத்தாகிய குழலினையுடையவன் 6சுவலின்மேலே கோலைவைத்த கையையுடையவனாகிய வினைவலபாங்கினோர்க்கு அயலதாயிருக்குங்காணென்றாள். எ - று. அயலதென்றது ஏறு தழுவுதற்குஅரிதென்னும் 7பொருட்டு. இம்மூன்று பெயரும் ஏறுதழுவினவர்களை நோக்கிச் கூறிற்று. 43 (1) கோளாள ரென்னொப்பா 8ரில்லென நம்மானுட் டாளாண்மை கூறும் பொதுவ னமக்கொருநாட்
1. "தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன், வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான், கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர், கேளாக வாழ்த லினிது" (திரிகடுகம். 12.) என்னுஞ் செய்யுளிலும் இப்பகுதியிலுமுள்ள எதுகைச்சொற்கள் ஒப்பு நோக்கற்பாலன. (பிரதிபேதம்)1கொள்ளுவையாயிற், 2ஆயர்மகள், 3தோளைமகளிர், தோள்வீரமகளிர், 4வெற்றிக்கொம்பையுண்டாக்கின, 5நமர்கூடிக்கூறுந்தலைவனை, 6சுவன் மேலேகோலைவைத்தகையையுடையவனா யொழிந்தவினைவல, 7பொருட்டாயிற்று, இம்மூன்று, 8இல்லே நம்மானுட்.
|