பக்கம் எண் :

நான்காவது முல்லை627

1கேளாள னாகாமை யில்லை யவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்

எ - து: யான் முற்கூறிய நிமித்தமேயன்றித் தலைவனைக் கண்டு என் கண்கள் உபகாரத்தைச் செய்கையினாலே ஏறுகொள்ளவல்லார் என்னையொப்பார் பிறரில்லை யென்று நம்முடைய பசுத்திரளிலே நின்று தனது தாளாண்மையைக் கூறுந் தலைவன் பின்பு ஒருநாளிலேயாயினும் ஏறுதழுவி 2நம்மைத் தனக்குக் கேளாக ஆளுந் தன்மையையுடையனாகாமை இல்லையென்றாள். எ - று.

தாளாண்மை - முயற்சியை.............ஆண்டு 3போதுவன். நம்மை, நமக்கு; உருபுமயக்கம். கண் வேளாண்மை செய்தலாவது, (1) இடக்கண் துடித்தல்; வலக்கண் 4துடிக்கலாதிருத்தலும் கன்னிமித்தமாதலிற் செய்தனவெனப் பன்மையாற் கூறினாள்.

47 5ஆங்கு, ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
(2) நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு
(3) முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு

எ - து: அவ்விடத்தில் ஏறுகளும் வருந்தின; இடையரும் புண்மிக்கா ரென்று எல்லாம் (விலக்குகையினாலே) தம்மைக் கொள்ளுதற்கு நின்ற


1. (அ) "கண்ணகி கருங்கணு மாதவி செங்கணு, முண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன, வெண்ணுமுறை யிடத்தினும் வலத்தினுந் துடித்தன" சிலப். 5 : 237 - 239. (ஆ) "போக மகளிர் வலக் கண்க டுடித்த" சீவக. 2173.
(இ) "நலந்துடிக் கின்றதோ நான் செய் தீவினைச், சலந்துடித் தின்னமுந் தருவ துண்மையோ, பொலந்துடி மருங்குலாய் புருவங் கண்முதல். வலந்துடிக் கின்றில வருவதோர் கிலேன்" (ஈ) "நஞ்சனை யான்வனத் திழைக்கு நாளிடை, வஞ்சனை யால்வலந் துடித்த வாய்மையா, லெஞ்சல வீண்டுதா மிடந் துடித்ததா, லஞ்சலென் றிரங்குதற் கடுப்ப தியாதென்றாள்" கம்ப. காட்சிப். 32, 35. என்பவைகளும் (உ) கலி. 11 : 19 - 22. அடிக்குறிப்பில் இடந்துடித்தல் நன்மைக்குறியென்பதை யறிவிக்கும் மேற்கோள்களும் ஈண்டு அறிதற்பாலன.

2. (அ) "நரந்தநா றிருங்கூந்தல்" (ஆ) "நாறிருங் கூந்தலார்" கலி. 54 : 5, 95 : 2.

3. "முல்லையந் தண்பொழில்" நாற். சூ. 6. மேற்கோள்.

(பிரதிபேதம்)1கோளாளனாகாமை, 2நம்மைக்கொள்ளுதலையாளுந், 3பொதுவன்தன்மை நமக்கு, 4துடித்தலாயிருத்தலும், 5 ஆங்க.