பொதுவரோடே தாம் புணர்தற்கு வேண்டும் நிமித்தங்களைப் பெற்று நாறுகின்ற கரிய கூந்தலையுடைய பொதுமகளிரெல்லாரும் முல்லையையுடைய குளிர்ந்த பொழிலிடத்தே விளையாடுதற்குப் புக்கார்; நாமும் பொழிலிடத்தே விளை யாடுதற்குப் போதுவாயாகவென்றாள். எ - று. அச்சூத்திரத்துட் பொதுவனென்னும் பெயர் முதலியனவும் அச்சாதியிற் றலைவற்கு வருதலுங் கொண்டவாறுணர்க. "புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல, தகத்திணை மருங்கி னளவுத லிலவே" என்னும் (1) சூத்திரத்திற் கைக்கிளை பெருந்திணைக்கும் தலைவருந் தலைவியரும் பலராய் வருவ ரென்றலின், இதன் சுரிதகத்துத் தலைவருந் தலைவியரும் பலராகக் கூறினார். இது சிறப்பில்லா ஆசுரமாகிய கைக்கிளை. இதனால், தலைவிக்கு 1நினைதல் பிறந்தது. இது கொச்சகம் இரண்டும் வந்தமையிற் கலிவெண்பாவின் 2வேறுபட்டு வந்த கொச்சகக்கலி. (1) (102). | கண்ணக னிருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற தண்ணறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும் வண்ணவண் டோன்றியும் வயங்கிணர்க் கொன்றையு மன்னவை பிறவும் பன்மலர் துதையத் | 5 | தழையுங் கோதையு மிழையு மென்றிவை தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடு மடமொழி யாயத் தவரு ளிவள்யா ருடம்போ டென்னுயிர் புக்கவ ளின்று; | 9 | ஓஒ இவள், பொருபுக னல்லேறு கொள்பவ ரல்லாற் றிருமாமெய் தீண்டல ரென்று கருமமா வெல்லாருங் கேட்ப வறைந்தறைந் தெப்பொழுதுஞ் சொல்லாற் றரப்பட் டவள்; | 13 | சொல்லுக, பாணியே மென்றா ரறைகென்றார் பாரித்தார் மாணிழை யாறாகச் சாறு; |
1. தொல். அகத். சூ. 55. இச்சூத்திர வுரையிலும் அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைக்குச் சிறுபான்மை தலைவரும் தலைவியரும் பலராகவருவ ரென்று கூறி, "ஏறும் வருந்தின................புணர்குறிக் கொண்டு" என்பதை மேற்கோள் காட்டினர்; நச். (பிரதிபேதம்)1 நினைத்தல், 2வேறுபாட்டுவந்த.
|