15 | சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லா மிடைபெறி னேராத் தகைத்து; |
17 | தகைவகை மிசைமிசைப் பாயிய ரார்த்துட னெதிரெதிர் சென்றார் பலர்; |
19 | கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந் துருத்தெழுந் தோடின்று மேல்; |
21 | எழுந்தது துக ளேற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்; |
25 | அவருள், மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி வருத்தினான் மன்றவவ் வேறு; |
28 | ஏறெவ்வங் காணா வெழுந்தா ரெவன்கொலோ வேறுடை நல்லார் பகை; |
30 | மடவரே நல்லாயர் மக்க ணெருந லடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்று முடலேறு கோட்சாற்று வார்; |
33 | ஆங்கினி, தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித் திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனி யந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த முறுவலாண் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்த துரை. |