| கண் (1) ணக னிருவிசும்பிற் கதழ் (2) பெயல் 1கலந்தேற்ற தண்ணறும் (3) பிடவமுந் தவழ் (4) கொடித் தளவமும் வண்ணவண் டோன்றியும் (5) வயங்கிணர்க் கொன்றையு 2மன்னவை பிறவும் பன்மலர் துதையத் | 5 | தழையுங் கோதையு மிழையு மென்றிவை தைஇனர் மகிழ்ந்து 3திளைஇ விளையாடு மடமொழி யாயத் தவரு ளிவள்யா 4ருடம்போ டென்னுயிர் புக்கவ ளின்று |
எ - து: இடமகன்ற பெரிய விசும்பிலே விரைந்துவருகின்ற மழை தன்னிடத்தே கலக்கையினாலே அதனை ஏற்றுநின்ற 5தண்ணிய நறிய பிடவமும் படர்கின்ற கொடியினையுடைய முல்லையும் நிறத்தினையுடைய வளவிய (6) தோன்றியும் விளங்குகின்ற கொத்தினையுடைய கொன்றையும் இவை
1. (அ) "அகலிரு விசும்பில்" பெரும்பாண். 1. (ஆ) "அகலிருவானத்து" மது. 267; மணி. 19 : 91. 2. "தண்டுளிக் கேற்ற பைங்கொடி முல்லை, முகைதலை திறந்த நாற்றம் புதன் மிசைப், பூமலர் தளவமொடு தேங்கமழ்பு" குறுந். 382. 3. "தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று, முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்" கலி. 101 : 1 - 2. 4. "கொடித்தளவமே" சீவக. 1651. 5. "கொன்றை யொள்ளிணர்", "நீடுசுரி யிணர சுடர்வீக் கொன்றை" நற். 221 : 4; 302 : 2. 6. தோன்றி, ஒருபூங்கொடி. மழைக்குத்தளிர்க்கு மியற்கையையுடையது; அதன் மலர் செந்நிறமானது. அம்மலருக்கு விளக்கும் பவழமும், கோழிச்சேவலின்றலைக்கு அம்மலரும் உவமையாகக்கூறப்படுகின்றன. இவற்றை, (அ) "விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றி, பவழத் தன்ன செம்பூத் தாஅய்" (ஆ) "கார்க்கேற், றெரிவனப் புற்றன தோன்றி" (இ) "நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட, தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப், புலமெலாம் பூத்தன தோன்றி" (ஈ) "வான்றோன்றி, வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநாடு" (உ) "மரகதத் தண்டிற் றோன்றி விளக்கெடுப்ப" (ஊ) "தோன்றி தோன்றுபு புதல் விளக்குறாஅ" (எ) "ஒண்சுடர்த் தோன்றி" (ஏ) "தோன்றி யொண்பூ வன்ன, தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்" என வருவனவற்றால் அறிக. (பிரதிபேதம்)1கலந்தெற்றத் தண்ணறும், 2இன்னவும் பிறவும், 3திளைவிளையாடு, 4உடம்போடின்னுயிர், 5கண்ணிய.
|