சீற்றமோ டாருயிர் கொண்டஞான் றின்னன்கொல் கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு எ -து : ஏறாகிய எருமையையேறுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சை (1) வடிம்பாலே பிளந்துபோகட்டுச் சினத்தோடே அரிய உயிரை வாங்கின அஞ்ஞான்றை, இறைவன் இத்தன்மையையுடையவன்கொலென்று கூறும் படியாகக் காற்றின் விசைபோல ஒடிவந்த விரைந்த ஏறாகிய காரியதனைப் பலரும்வந்து சேர்தலையுடைய களத்தே வலியடங்கத் தழுவி வருத்தி அதன்மேலே தோன்றிநின்ற பொதுவனது அழகைப் பாராய்; அதனைக் கண்டு என் நெஞ்ச உட்கிற்றுக்காணென்றாள். எ - று. 46 | இகுளை 1யிஃதொன்று கண்டை யிஃதொத்தன் (2) புல்லினத் தாயர் மகனன்றே புள்ளி வெறுத்த வயவெள்ளேற் றம்புடைத் திங்கண் மறுப்போற் பொருந்தி யவன் |
எ - து : மற்றைப் புள்ளிகள் செறிந்த 2வலியையுடைய வெள்ளேற்றினது அழகையுடைய பக்கத்தே திங்களிற் கிடக்கின்ற மறுப்போலே பொருந்திக் கிடந்தவன் ஆட்டினத்தையுடைய ஆயர்மகனல்லவோ? ஆதலால் இவ னொருத்தன்காண்; இளையோளே! 3இஃதொரு வலியைப் பாராயெனக் காட்டினாள். எ - று. 50 | ஒவா வேகமோ டுருத்துத்தன் மேற்சென்ற 4சேஎச் செவிமுதற் கொண்டு பெயர்த்தொற்றுங் (3) காயாம்பூங் கண்ணிப் பொதுவன் றகைகண்டை மேவார் விடுத்தந்த (4) கூந்தற் குதிரையை |
1. வடிம்பு - கால் விளிம்பு; (அ) ''மா வுடற்றிய வடிம்பு'', (ஆ) கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்' (இ) ''ஆழி வடிம்பலம்ப நின்றானும்'' (ஈ) ''வேலைவடிம்பலம்ப நின்றான்'' (உ) ''கடல்வடிம்பலம்ப நின்ற கைதவன்'' என வருவனநோக்குக. 2. (அ) ''புல்லினத் தார்க்கும்'' (ஆ) ''புல்லினத் தாயர் மகளிரோடு'' (இ) ''புல்லினத் தாயர் மகனேன்'' (ஈ) ''புல்லினத் தாயனை'' கலி. 107 : 2; 111 : 5; 114 : 7, 8. 3. ''காயாம்பூங் கண்ணிக் கருந்துவ ராடையை'' கலி. 108 : 10. 4. ''கூந்த லென்னும் பெயரொடு கூந்த, லெரிசினங் கொன்றோய்'' (பரி. 3 : 34 - 32.) என்பதும் 'கூந்தன்மா என்று கண்டார்சொல்லும் வடிவொடு வந்த கேசியது கனல்கின்ற சினத்தை யழித்தோய்; (பிரதிபேதம்)1இகுதொன்று, 2வலியையுடையலேற்றினதழகை, 3இஃகுதொரு, 4சேஎசெவி.
|