வாய்பகுத் திட்டுப் புடைத்தஞான் 1றின்னன்கொன் மாயோனென் றுட்கிற்றென் னெஞ்சு எ - து : கஞ்சன்முதலியோர் வரவிட்ட கழுத்தின்மயிரினையுடைய குதிரையை வாயைப் பிளந்துபோகட்டுக் கையால் 2அடித்த அஞ்ஞான்றைக் கண்ணன் இத்தன்மையன்கொல்லென்று கூறும்படியாக ஒழியாத கோபத்தோடே வெவ்விதாய்த் தன்மேலே சென்ற சிவந்த ஏற்றைச் செவியடியிற் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு அதன்வலியை மீட்டுத் தழுவும், காயாம் பூவாற் செய்த கண்ணியையுடைய பொதுவன் அழகைப்பாராய்; 3அவனைக் கண்டு என்னெஞ்சு உட்கிற்றுக்காணென்றாள். எ - று. 56
(3)
| ஆங்கு, (1) இரும்புலித் தொழுதியும் (2) பெருங்களிற் றினமு மாறுமா றுழக்கியாங் குழக்கிப் பொதுவரு மேறுகொண் டொருங்குதொழூஉ விட்டனர் விட்டாங்கே மயிலெருத் துறழணி மணிநிலத்துப் பிறழப் பயிலிதழ் மலருண்கண் மாதர் மகளிரு மைந்தரு மைந்துற்றுத் தாதெரு மன்றத் தயர்வர் (4) தழூஉ | 63 | (5) கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே 4மாய மகள் |
கூந்தலையுடைய மாவைக் கூந்தலென்றும் பெயரினையுடையவடிவைப் பெயரென்றுங்கூறினார்; ஆகுபெயரான். கேசி - குதிரையாய்வந்து பொருதானோ ரசுரன், இப்பெயர் கேசமென்னும் வடமொழி முதனிலையாக முடிந்தமையின் அதன்பொருண்மைபற்றிக் கூந்தலென்றார்' என்னும் அதனுரையும்; ''கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்'' (முத்தொள்.) கூந்தல்வாய் கீண்டானை'' (நாலாயிர. இயற்பா. 2-ஆம் திருவந்தாதி. 93) என்பவைகளும் ஈண்டு அறிதற் பாலன. 1. சிறுத்தைப்புலியும் உண்மையின்வேங்கைப்புலியை இரும்புலியென்றார். 2. பன்றியும் களிறெனப்படுமாதலின் யானையைப் பெருங்களிறென்றார். 3. ''தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே'' சிலப். 17. 'மாயவன்றன்' 4. ''தழூஉப் பிணையூஉ, மன்றுதொறு நின்ற குரவை'' மது. 614 - 615. என்பவாதலால், குரவைக்குத் தழூஉவென்று ஒரு பெயரிட்டார். 5. ''கொல்லேற்று..................ஆயமகள்'', ''வளியா வறியா...................ஆயமகடோள்'' என்னும் பகுதிகள் ஏறுதழுவினாற்கு உரியளிவளெனவந்த கைக்கிளைகடகு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச். (பிரதிபேதம்)1இன்னகொன், 2அடித்தவன்றைஞான்றை, 3அதனை, 4ஆயர்மகள்.
|