பக்கம் எண் :

நான்காவது முல்லை647

65 அஞ்சார் கொலையேறு கொள்பவ ரல்லதை
நெஞ்சிலார் தோய்தற் கரிய வுயிர்துறந்து
நைவாரா வாயமக டோள்
68 வளியா வறியா வுயிர்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ வாயமக டோள்
71 விலை 1வேண்டா ரெம்மினத் தாயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்
74 ஆங்கு
(1) குரவை தழீஇயா மரபுளி பாடித்
2தேயா (2) விழுப்புகழ்த் தெய்வம் பரவுது
மாசில்வான் முந்நீர் பரந்த தொன்னில
மாளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே.

எ - து : அவ்விடத்தே அப்படிக்காட்டி (3) மயிலினதுகழுத்தை மாறுபடு கின்ற அணியப்பட்ட காயாம்பூவாற் செய்த கண்ணிகள் பவளம்போலும் நிறத்தையுடைய சிவந்தநிலத்தே மாறுபட்டுக்கிடக்கும் பொதுவரும் பெரிய புலித்திரளும் பெரிய களிற்றுத்திரளும் தம்முண்மாறு மாறாய்ப் பொருதாற்


1. ''முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன்றருதற்கு மாயோன் ஆகுதிபயக்கும் ஆபல காக்கவெனக் குரவை தழீஇ மடைபல கொடுத்தலின் ஆண்டு, அவன் வெளிப்படுமென்றார்'' (தொல். அகத். சூ. 5. நச்.) என்பது ஈண்டு அறிதற் பாலது.

2. (அ) ''புகழொத் தீயே யிகழுந ரடுநனை'' (ஆ) ''புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன, வுரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற'' புறம். 56 : 13, 57 : 2 - 3; (இ) உரைசால் சிறப்பி னெடியோன்'' சிலப். 22 : 60.

3. (அ) ''கருநனைக் காயா கணமயி லவிழவும்'' சிறுபாண். 165. (ஆ) ''புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை, மென்மயி லெருத்திற் றோன்றும்'' குறுந். 183. (இ) ''கலவ மாமயி லெருத்திற் கடிமல ரவிழந்தன காயா'' சீவக. 1558. எனவும், (ஈ) ''பூவை மலர்புரை யெருத்து மஞ்ஞை'' காஞ்சிப். கழுவாய்ப். 185. (உ) ''பறவாப்பூவை

(பிரதிபேதம்)1வேண்டாரரெம்மினதாயர், 2தொய்யாவிழுப்புகழ்.