பக்கம் எண் :

648கலித்தொகை

போலப் பொருது எற்றைத் தழுவிக்கொண்டு சேரத் தொழுவை விட்டுப் போனார்; அவர் போன அப்பொழுதே நெருங்கிய இதழ்களையுடைய மலர்போலும் உண்கண்ணினையுடை காதலையுடைய மகளிரும் அவர் கணவரும் வலியுற்றுத் தாதாகிய எருவையுடைய மன்றத்திலே குரவைக் கூத்தை ஆடுவார்கள்; ஆண்டு யாமுஞ் சென்று அக்குரவைக் கூத்தின் கண்ணே கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய கோட்டிற்கு அஞ்சும் பொதுவனை மறுபிறப்பினும் ஆயர்மகள் தழுவாளென்றும், ஆயர்மகள் தோள், அஞ்சாராய் உயிரைத் துறந்து கொலைத்தொழிலையுடைய ஏற்றைக்கொள்பவர் 1செறியுமவையல்லது வருந்துதல்வந்து தழுவுதற்கு நெஞ்சில்லாதவர்கள் செறிதற்கரியவென்றும், உயிராவது ஒரு காற்றாக உணராதே அதனைக் காவல்கொண்டு 2அதனுடனே ஒரு செறிவாயேற்றின் மருப்பினை அஞ்சும் நெஞ்சினையுடையார் செறிதற்கு ஆயர்மகளிருடைய தோள் எளியவாயிருக்கு மோவென்றும், கொலைத் தொழிலையுடைய ஏற்றினது கொம்பினிடையிலே தாம்விரும்பும் மகளிருடைய மார்பின் முலையிடையிலே விழுமாறு போல வீழில், எம்முடைய இனத்தில் ஆயர் தத்தம் மகளிர்க்கு 3முலைவிலை வேண்டாரென்றும், யாம் சுற்றத்தார்கூறும் முறைமையைப் பாடிக் குரவைக் 4கூத்தாடி அவ்விடத்துக் குற்றமில்லாத அழகையுடைய கடலிடத்தே பரந்து கிடக்கின்ற பழைய நிலத்தையாளும் உரிமையோடே பொருந்தின. எம்முடைய பாண்டியன் இந்த அகன்ற இடத்தையுடைய உலகின்கண்ணே வாழ்வானாக வென்று அவ்விடத்துக் 5கெடாத சீரிய புகழையுடைய தெய்வத்தைப் பரவுவேம்; நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாகவென்றாள். எ - று.

''மரபுநிலைதிரியா'' என்னும் (1) சூத்திரத்து ''விரவும்பொருளும் விரவும்'' என்றதனால், குரவையாடல் ஏறுகோடற்கைக்கிளையுள் விராய்வருமென்றும் தெய்வத்தையன்றி அரசரை வாழ்த்திய வாழ்த்தும் விராய்வருமென்றுங் 6கூறலின் இங்ஙனங்கூறினார். இவ்விதிஇவ்வாறே மேல் 7வருவனவற்றிற்குங் கொள்க.

இதனால், தலைவிக்கு 8நினைதல் பிறந்தது.

இது 'குட்ட மெருத்தடி 9யுடைத்து மாகும்'' (2) என்பதனாற்குட்டம்பட்ட தரவும் 'புரிபுபுரிபு......................வேறு' என இரண்டடி முடுகியலும், 'அரிபரி


மலர்ந்தனைய பசியகழுத்து மயில்'' உத்தரகோச. தீர்த்தச்சிறப்பு. 31 எனவும் வருவன இங்கே நோக்கற்பாலன.

1. தொல். அகத். சூ. 45. இச்சூத்திரத்தின் இவருரையில் இக்குறிப்பிலுள்ள செய்திகளோடு 'விரவும் பொருள் விரவும்' எனவே ஆய்ச்சியர் குரவைக்கூத் தல்லது வேட்டுவவரிக்குரிய வெறியாட்டு விரவாதென் றுணர்க' என்னுஞ் செய்தியும் காணப்படுகின்றது.

2. தொல். செய். சூ. 116.

(பிரதிபேதம்)1செய்யுமதல்லது, 2அத்துடனே, 3முலையிலே வேண்டார், 4கூத்தையாடி யவ்விடத்து, 5கொடாத சீரிய, 6வருவவற்றிற்கும், 7கூறலிங்ஙனங் கூறினார், 8நினைத்தல், 9உடைத்துமென்றதனால், குட்டம் தரவும்.