55 | பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமே லூர்பவர் கோடிடை நுழைபவர் கோட்சாற்று பவரொடு புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வி லைவ ரட்ட பொருகளம் போலுந் தொழூஉ; | 60 | தொழுவினுள், கொண்டவே றெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர் வாங்கெழி னல்லாரு மைந்தரு மல்லலூ ராங்க ணயர்வர் தழூஉ; | 63 | பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக் கோடு குறிசெய்த மார்பு; | 65 | நெற்றிச் சிவலை நிறையழித்தா னீண்மார்பிற் செற்றார்கண் சாயயான் சாரா தமைகல்லேன் பெற்றத்தார் கவ்வை யெடுப்ப வதுபெரி துற்றீயா ளாயர் மகள்; | 69 | தொழீஇஇ, ஒருக்குநா மாடுங் குரைவையு ணம்மை யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல் குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ வாயர் மகன்; | 73 | நேரிழாய், கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக் காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த வூராரை யுச்சி மிதித்து; | 77 | ஆங்கு; தொல்கதிர்த் திகிரியாற் பரவுது மொல்கா வுருமுறழ் முரசிற் றென்னவற் கொருமொழி கொள்கவிவ் வுலகுட னெனவே |
இது "நாடகவழக்கினும்" என்னும் (1) சூத்திரத்துப்"பாடலுளமையாத" என்றதனால் ஏறுதழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி,
1. தொல். அகத். சூ. 53. இச்சூத்திரத்தின் இவருரையினும் இச்செய்யுள் மேற்கோளாக இக்குறிப்பு, சிறிது வேறபாட்டோடுவிளக்கமாக உளது.
|