இக்குரவையுள் அவனைப் பாடுகம் வாவென்றாட்கு, அவள் உடம் பாட்டினுள், தான் அலரச்சம் நீங்கினமையும் அவன் தன்னை வருத்தின மையுங் கூறிப் பாடி, பின்னர்த் தோழி நமர் அவற்கு நின்னைக்கொடை நேர்ந்தாரெனக்கூறியது. இதன் பொருள். (1)
(3) | மலிதிரை யூர்ந்துதன் (2) மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் 1புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய (4) வாடாச்சீர்த் (5) தென்னவன் | 5 | றொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத் தாய ரொருங்குதொக் கெல்லாரும் (6) வானுற வோங்கிய வயங்கொளிர் (7) பனைக்கொடிப் பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும் |
1. தரவுஈற்றடிகுறைந்தும்வருமென்பதற்கு "மலிதிரை.......................தொழூஉ" என்னும் பகுதி மேற்கோள். தொல். செய். சூ. 116. நச். 2. "அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு, தென்றிசை யாண்ட தென்னவன்" சிலப். 11 : 17 - 22. என்பதும் 'அங்ஙனமாகிய நிலக்குறைக்கு சோழநாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக்குண்டூர்க் கூற்றமுமென்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்டதென்னவன்' என்றெழுதிய உரையிலுள்ள செய்தியும் ஈண்டு அறிதற்பாலன. 3. அரசர் பிறவரசரிடம் வலியாற்கொண்ட நாட்டைத் தமதென அறிவித்தற் காக அங்கே தம் கொடியைப் பலருமறியப் பொறித்தல் மரபு; இதனை, 'கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி, நெடுநீர்க் கெண்டை யொடு பொறித்த, குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே" (புறம். 58. 30 - 32) என்பதனாலும் அறிக. 4. "வாட்டருஞ்சீர்" சிலப். 9 : 41. 5. "வீவில் குடிப்பி னிருங்குடி யாயரும்" கலி. 105 : 7. 6. "தேம்படுபனையின்றிரள்பழத்தொருவிதை, வானுறவோங்கி" வெற்றி. 7. பனைமுன் கொடிவரின் ஐகாரங் கெடாது நிற்றற்கு, "பனைக்கொடி" என்பது மேற்கோள்; தொல். உயிர். சூ. 83. இளம். நச். (பிரதிபேதம்)1புலியொடு.
|