எ - து : வெய்ய வலியினையுடைய சிவந்த ஏற்றினது சினத்தை அஞ்சானாய் அதனைத் தழுவுமவன், வரியினையுடைத்தாகிய குழையினையுடை யாளுடையமூங்கிலையொக்கும் மெல்லியதோளிலே 1துயிலுதலைப் பெறும். எ-று. வரி -(1) அருப்புத்தொழில். 15 | என்றாங் கறைவனர் நல்லாரை யாயர் முறையினா னாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோன் மிடைமிசைப் பேணி நிறுத்தா ரணி |
எ - து : 2என்று நல்லாயர் தமக்குரிய முறைமையாலே 3சுற்றுவன வாகிய நாளாகிய மீன்கள் தன்னிடத்தைச் சூழப்பட்டமதிபோலே அவ்விடத்தி லிட்ட பரண்களின்மேலே தத்தம் மகளிரைத் திரளாக ஒப்பித்து நிறுத்தினார். எ-று. (2) | மீனும் மதியும், ஆயத்திற்கும் மகளிர்க்கும் 4உவமை. | 29 | அவ்வழிப், பறையெழுந் திசைப்பப் பல்லவ ரார்ப்பக் குறையா மைந்தர் கோளெதி ரெடுத்த நறைவலஞ் செயவிடா விறுத்தன வேறு |
எ - து : அவ்விடத்துப் புகை வலம்வர விடப்பட்டு நிறுத்தப்பட்டன வாகிய ஏறுகள், பறை மிக்கொலிக்கையினாலும் பலரும் ஆரவாரிக்கையினாலும் வலிகுறையாத ஆயர்கோடற்றொழிற்கு எதிரே ஏன்றன. எ - று. 32 | அவ்வேற்றின் (3) மேனிலை மிகலிகலின் மிடைகழி பிழிபு மேற்சென்று வேனுதி புரைவிறற் றிறனுதி மருப்பின் மாறஞ்சான் |
1. அருப்புத்தொழில் என்றது ஆபரணங்களில் நுண்ணிதாகச் செய்யும் சிறிய அரும்புபோன்ற வேலைகளை. ''தாள் களங்கொலக் கழல்பறைந் தன'' (புறம். 4 : 3) என்புழி 'கழல்பறைந்தன' என்பதற்கு, 'வீரக்கழ அருப்புத் தொழில் பறைந்தவை' என்று எழுதியிருக்கும் உரை ஈண்டு அறிதற்பாலது. 2. ''தாரகையோடு ஆயத்தார்க்கு ஒத்த பண்பு, பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற் றாழ்ந்து நிற்றலும்....................மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு, கட்கினிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும்'' என்று (கோவையார். 124) பேராசிரியர் எழுதியிருக்கும் விசேடவுரை இங்கே அறிதற்பாலது. 3. ''ஐஞ்சீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பா, கலிக்கு உறுப்பாய் வருதற்கு, ''மேனிலை மிகலிகலின்.......................... வண்ணனும் போன்ம்'' என்னும் பகுதி மேற்கோள்; தொல். செய்.சூ. 67, நச். (பிரதிபேதம்)1துயிலைப்பெறும் என்றாங் கறைவன நல்லாரை, 2என்று தமக்குரிய, 3சுற்றுவனராகிய, 4உவமைஅரியாகுபெயர். வரி அரூப்புத்தொழில். அவ்வழி.
|