பக்கம் எண் :

658கலித்தொகை

பானிற வெள்ளை யெருத்தத்துப் 1பாய்ந்தானை
நோனாது குத்து மிளங்காரித் தோற்றங்காண்
பான் (1) மதி சேர்ந்த வரவினைக் கோள்விடுக்கு
நீனிற வண்ணனும் போன்ம்

எ - து : அந்த ஏறுகளின்மேலே நிலைபெறும் மிகுதலையுடைத்தாகிய மாறுபாட்டினாலே மிடைமிசையினின்றும் இழிந்து அதனைவிட்டுச்சென்று வேலினது முனையையொக்கும் 2முனையையுடைய கொம்பினது விறலாகிய திறத்தினையுடைய மாறுபாட்டிற்கு அஞ்சானாகிப் பானிறம்போலும் வெள்ளிய ஏற்றினது கழுத்திலே 3பாய்ந்தானைப்பொறாதே மேற்சென்று குத்தும் இளைய கரிய ஏற்றினது தோற்றரவு, பால் போலும் மதியைச் சேர்ந்து மறைத்த பாம்பினை அது மறைத்ததன்மையை விடுவிக்கும் நீலநிறம்போலும் 4நிறத்தை யுடைய வனையும் ஒக்கும்; அதனைப் பாராயென்றாள். எ - று.

வண்ணன், மாயோன்.

39(2)


(3)
இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க
வரிபரி பிறுபிறுபு குடர் சோரக் குத்தித்தன்
கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும்
5வாடில் வெகுளி யெழிலேறு கண்டை 6யிஃதொன்று

1. (அ) ''மாமதிகோண், முன்னம் விடுத்த முகில்வண்ணன்'' பெரிய திரு மடல். 66. (ஆ) ''தேம்பலிளந்திங்கட் சிறைவிடுத் தைவாய்ப், பாம்பினணைப் பள்ளிகொண்டாய்'' பெரியதிருமொழி. (11) 8 : 7. (இ) ''கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு'' சீவக. 454. (ஈ) ''பான்மதி விடுத்தனை'' யா - வி. மேற்.

2. நாற்சீரடியும் ஐஞ்சீரடியும் முடுகியலடியாக வந்ததற்கு (அ) ''இரி பெழு.........................தலைச்சென்று'' என்னும் அடிகள் தொல். செய். சூ. 155. பேர். உரையிலும் (ஆ) ''இரிபெழு..........................கண்டை யிஃதொன்று என்னும் அடிகள் தொல். செய். சூ. 66. பேர். உரையிலும் முடுகுவண்ணத்திற்கு (இ) ''இரிபெழு பதிர்பதிர் பிகந்து'' என்பது தொல். செய். சூ. 233. நச். உரையிலும் மேற்கோள்.

3. வாடுதல் குறைதலென்னும் பொருளில் வருதலை ''வாடற்க வையை நினக்கு'' (பரி. 6 : 106) என்பதன் உரையாலும் அறிக.

(பிரதிபேதம்)1பாய்ந்தானைக் கோணாது குத்து, 2முனையுடைய கொம்பினது விறலாற் றுதலையுடைய, 3பாய்ந்தவனைப், 4நிறத்தையுடையவனையும், 5வாடா வெகுளி. 6இஃகுதொன்று, அஃதொன்று.