60 தொழுவினுள், கொண்டவே றெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர் வாங்கெழி னல்லாரு மைந்தரு மல்லலூ ராங்க ணயர்வர் தழூஉ எ - து : அத்தொழுவிடத்துத் தழுவிக்கொண்ட ஏறுகளெல்லாம் மேயும் நிலத்தேபோக அமையாத சீரினையும் நோக்கினார் கண்ணை வாங்கிக்கொள்ளும் 1அழகினையுமுடைய ஆய்ச்சியரும் ஆயரும் வளப்பத்தையுடைய ஊரிடத்தே குரவையாடுவரெனத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறினாள். எ - று. 93 பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக் கோடு குறிசெய்த மார்பு எ - து : கூறி, பொதுவனுடைய கொலைத்தொழிலையுடைய ஏற்றினுடைய கொம்புகள் குறியிட்டுவிட்ட மார்பைப் பாடுவேமாக வாருங்கோளெனத் தலைவி யையும் ஆயத்தையும் நோக்கிக் கூறினாள். எ - று. 65 | நெற்றிச் சிவலை 2நிறையழித்தா னீண்மார்பிற் செற்றார்கண் சாயயான் சாரா தமைகல்லேன் பெற்றத்தார் கவ்வை யெடுப்ப வதுபெறி துற்றீயா ளாயர் மகள் |
எ - து : அதுகேட்ட தலைவி, நெற்றியிலே சிவந்த சுட்டியினையுடைய ஏற்றைவிரவி நிறைதலைக்கெடுத்தவனுடைய நீண்ட மார்பிலே பகைத்து அலர் கூறுகின்ற மகளிர் நம்மை இகழ்ந்து பார்க்குங் கண்கள் இகழ்ந்து பாராதிருக் கும்படியாக யான் சாராமல் அமைந்திரேன்; இனி, பசுவையுடைய ஆய்ச்சியர் அலர்கூறுவதற்குப் பெரிதும் வருத்தமுறேன் யானென்றாள். எ - று. ஆயர்மகளென்று தன்னைப் பிறர்போற் கூறினாள். 69 (1) தொழீ இஇ எ - து : தொழில் செய்கின்றவளே. எ - று. (2) (3) | ஒருக்குநா மாடுங் குரவையு ணம்மை யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல் |
1. இந்நூற்பக்கம் 644 : 1-ஆம் குறிப்புப் பார்க்க. 2. புகுமுகம்புரிதல் கைக்கிளைக்கண் வந்ததற்கு, ''ஒருக்குநாம்...............மகன்'' என்னும், பகுதி மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 19. பேர். இ - வி. சூ. 580. 3. ''அருக்கு மங்கையர் மலரடி'' திருப்புகழ். (பிரதிபேதம்) 1அழகினையுடைய, 2நிறையழித்த நீண்மார்பிற் சென்றார்.
|