தழுவுவாரைப் பெறாமல் நின்ற நிறத்தையுடைய சிவந்த ஏறு உயிர்குறைகின்ற நாளிடத்தே அவர்பின்னேசென்று குற்றத்தைச்செய்து துகைத்து உயிரையுண்ணுங் கூற்றுவனையும்போலும்; இதனைப்பாராயென்றாள். எ - று. 39 | பாடேற் றவரைப் படக்குத்திச் செங்காரிக் கோடெழுந் தாடுங் கணமணி காணிகா 1நகைசா லவிழ்பத நோக்கி நறவின் முகைசூழுந் தும்பியும் போன்ம் |
எ - து: சிவந்த கரிய ஏற்றினுடையகொம்புகள் 2படுதலை மார்பிலே ஏற்றவர்களைக் கொம்புகளாலே படும்படி குத்தி மேனோக்குதலாலே வீழ்ந்த குருதியால் நனைந்து அசையும் பலவாகத் திரண்ட திரட்சியையுடைய சிறிய மணிகள் ஒளியமைந்த நறாம்பூவினது முகையவிழுஞ் செவ்வியைநோக்கி அதனைச் சூழ்ந்து திரியும் தும்பியையும்போலும்; அதனைப்பாராயென்றாள். எ-று. "நறாவிதழ் கண்டன்ன 3செவ்விரற் கேற்ப" (1) என உவமைகூறலின் நறாம்பூவைஈண்டுமணிக்கு (2) உவமைகூறவே சிறியமணிகள் கோத்துக்கட்டினமையும் கோடெழுந்தென்றதனால் அக்கோடு எழுந்தகாலத்து வீழ்ந்த குருதியால் அவை சிவந்தமையும் பெற்றாம். 43
(3) | இடைப்பாய்ந் தெருத்தத்துக் கொண்டானோ டெய்தி மிடைப்பாயும் வெள்ளேறு கண்டைகா வாள்பொரு வானத் தரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பான்மதியும் போன்ம். |
1. கலி. 84 : 22. 2. நறாம்பூவை ஏற்றின் கொம்புக்கும் தும்பியை அக்கொம்பிற் கட்டிய மணிக்கும் உவமையாகக் கொள்வது பொருத்த மென்று தோற்றுகிறது. "அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன, செவ்வரி யிதழ சேணாறு நறவி, னறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப், பொன்னுரை கல்லி னன்னிறம் பெறூஉம், வளமலை" (நற். 25) என்பதனால்நறாம்பூ, செவ்வரியையும் தும்பிமொய்த்தலையுமுடைய தென்பது விளங்கும்; "நளிர் கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்" (சூளா. தூது. 4) என வருதலால் இதன் முதல் ஒருகொடி யென்று தெரிகிறது. மயிலைநாதரும் ஒருகொடியென்றே கூறினர். இதனை ஓடையென்பது போல ஒரு மரத்துக்கும் ஒருகொடிக்கும் பெயரென்பாரு முளர். 3. "வாள்போழ் வானத்து வயங்குகதிர் சிதறி" நாற். சூ. 147. மேற். (பிரதிபேதம்)1தகைசால், 2படுத்தலை மார்பிலே, 3மெல்விரற்கேற்ப.
|