35 | கொள்வாரைக் கொள்வாரைக் (4) 1கோட்டுவாய்ச் சாக்குத்திக் கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்சேகில் காணிகா (1) செயிரிற் குறைநாளாற் பின்சென்று சாடி யுயிருண்ணுங் கூற்றமும் போன்ம் |
எ - து: அங்ஙனம் பாய்ந்து கொம்பிடத்தே பிடித்துக்கொண்டும் மார்பிலே உறும்படி தழுவிக்கொண்டும் 2கழுத்திடத்திலே அடங்கிக்கிடந்தும் குட்டேறு முறியும்படி தழுவியும் தோளுக்குநடுவே கழுத்தைப் புகுதவிட்டுப் பிடித்தும் நெருங்கிக் கொம்புகள் தம்மேலேபடுதலை ஏற்றுக்கொண்டும் நிரைத்துத் தம் மேலே சென்ற ஆயரைப் பின்னர்க் கீழேவீழ்த்து நீண்ட மருப்புத் தைக்கும் படி குத்தி அவர்கள் தழுவுகின்ற கழுத்திடத்தைத் தழுவக்கொடாதே ஏறுகள் அவரை நீக்கி நிறுத்தின; அங்ஙனம் நிறுத்தினபின்பும் சென்று தழுவுவாரைத் தழுவு வாரைக் கோட்டிடத்தே சாம்படி குத்திப் பின்பு சென்று
1. "சாப்புல்லற் பாற்று" என்பதற்கு, 'சாம் வண்ணம் பொருந்தற் பான்மை யுடைத்து' என்று பொருள்கூறி, 'சாவவென்பதனிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது' என இலக்கணமெழுதி, 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' என்புழிப்போல வென இதனை மேற்கோளுங் காட்டினர் பரிமேல்; குறள். 829. இந்நூற்பக்கம் 623 : 2-ஆம் குறிப்புப்பார்க்க. 2. (அ) "காலனுங் காலம் பார்க்கும்" புறம். 41 : 1. (ஆ) "எண்ணி யுயிர் கொள்வான் வேண்டித் திரியினு, முண்ணுந் துணைக்காக்குங் கூற்று" பழ. 89. (இ) "ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட், காலம் பார்க்குங் காலன் போல" பெருங். (1) 37 : 204 - 205 (ஈ) "சாற்று நாளற்ற தெண்ணித் தருமம்பார்த், தேற்றும் விண்ணென்ப தன்றி யிவளைப்போ, னாற்றங் கேட்டலுந் தின்ன நயப்பதோர், கூற்றுண்டோ" கம்ப. தாடகை. 64. (உ) "நோற்றநோன் புடைய வாழ்நாள் வரமிவை நுனித்த வெல்லாங், கூற்றினுக் கன்றே வீரன் சரத்திற்குங் குறித்ததுண்டோ" கம்ப. நிந்தனைப். 43. (ஊ) "அடுத்தலோம்பிய செய்கைய னென்பதா லவனைக், கொடிய னென்பரா லறி விலார் செய்வினை குறித்து, முடிவி லாருயி ரெவற்றிற்கு முறை புரிந் திடலா, னடுவ னென்கின்ற தவன்பெய ருலகெலா நவிலும்" (எ) "கொல்வன்னெனக் காலந்தெரி கூற்றாமென நின்றேன்" கந்த. மார்க்கண்டேய. 222. இரண்டாநாட் சூரபன்மன். 213. (ஏ) "நாள் வரைக்கு நமனொத்த வாளியார்" கழுக்குன்ற. பசுவராக. 8. (ஐ) "மாயுநாளுற நடுவ னோர்ந்தே, யாட்படுந்தூதர் நீர்போ யாங்கவற் கொணர்மி னென்ன" வேதாரணிய. சோரச். 13. (ஒ) "நாள்வரை யறையே நோக்கு நடுவனார் தூத ரேய்ப்ப" திருவானைக்கா. திருநாட்டுச். 83 (பிரதிபேதம்)1கோட்டின்வாய்ச், 2கழுத்திலே.
|