பக்கம் எண் :

நான்காவது முல்லை671

23 அவ்வழி

எ - து: அங்ஙனம் அவர் புகுத விட்ட இடத்து. எ - று.

(1) காரெதிர் கலியொலி கடியிடி (2) யுருமி னியங்கறங்க
(3) வூர்பெழு கிளர்புளர்:புயன்மங்குலி னறைபொங்க
நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்பச்
சீர்கெழு சிலைநிலைச் செயிரிகன் மிகுதியிற் சினப்பொதுவர்
தூர்பெழு துதைபுதை துகள்விசும் புறவெய்த
வார்புடன் 1பாய்ந்தா ரகத்து

எ - து: கார்காலத்துத் தம்மில் எதிர்ந்த கலிப்பினையுடைய உருமினது கடிய இடியொலிபோல வாச்சியங்கள் ஒலியாநிற்கப் பரந்து உயர்ந்து எழுகின்ற அசைதலையுடையமேகம்போலத் திசைகளிலே புகைமூச்செழாநிற்கப் புறவிதழ் ஒடிந்த மணத்தையுடைய ஒத்தவிதழாற் கட்டின மாலையையுடைய மகளிர் நிரைநிரையாக அணியாநிற்கக் குற்றத்தைச் செய்த மாறுபாட்டின் மிகுதியாலே தலைமைபொருந்தின சிலைக்கின்றநிலைமையினையுடைய சினத்தையுடைய பொதுவர் எழுகின்ற நெருங்கின கண்கள்மறைத்தற்குக் காரணமான துகளாலே விசும்பு 2தூர்ந்துமிகும்படி அத்துகள் சென்று சேரும்படியாக ஆர்த்து அத்தொழுவினுள்ளே சேரப் பாய்ந்தார். எ - று.

30மருப்பிற் கொண்டு மார்புறத் தழீஇயு
மெருந்திடை யடங்கியு 3மிமிலிறப் புல்லியுந்
தோளிடைப் 4புகுதந்துந் துதைந்துபா டேற்று
நிரைபுமேற் சென்றாரை நீண்மருப் புறச்சாடிக்
கொளவிடங் கொளவிடா நிறுத்தன வேறு

புடைவிளித் தார்க்குமோதைப் பொருமுழக் கியமன் கேளா, விடை தெரித்துரைமினென்ன விலங்கெயிற்றுலங்கொ டிண்டோண், மிடை வலி மிருத்துக்காலிரிருவரை விடுப்பச் செல்வார்" வேதாரணிய. சோரச். 17.

1. கலிப்பாவில் ஐஞ்சீரடி முடுகி வந்ததற்கு, "காரெதிர்.................ரணி நிற்ப" என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 66. பேர்.

2. "இடியார் பணைதுவைப்ப" பு - வெ. உழிஞை. 27.

3. "படுமழை யாடும் வரையகம் போலுங், கொடிநறைசூழ்ந்த தொழூஉ" கலி. 103 : 20 - 21.

(பிரதிபேதம்)1பாய்ந்தனரகத்து, 2 தூர்ந்துபோம்படியத்துகள், 3இமிலிற்புல்லியும். 4புகுந்துந்துதைந்து.