முத்தென்றுமாம். உடன் 1புகுத்தனரென்க. (1) முருகன் தனக்கு உரித்தல்லாத வெண்டுகில் உடுத்தாற்போலக் கால் வெளுத்த எருது. முன் இறைவன் கையதாய் ஊழிமுடிவின்கண் அவன் ஏவலால் உயிர்த்திறமேற் றிரியுங் கணிச்சி. (2) காலன், 2கூற்றுவனேவலாளன்.
அத்தூதர் வணிகன் வாணிகத்தாற் பெருஞ்செல்வம் ஈட்டியுளானென்றும் வேளாளன் செழிப்பாக ஒரு கருப்பந்தோட்டம் பயிர்செய்திருக்கிறா னென்றும் சொன்னார்கள். அரசன் அதனைக்கேட்டு அவர் நிலையை நேரே அறியக் கருதியதனால் அவ்விருவரும் உறையும் ஊரிலுள்ள கொற்றவையின் திருவிழாவிற்குச் சென்றிருந்தபொழுது முதலில் வணிகனையழைப்பித்து வினவ அவன் தனக்குக் கொடுத்த பொருளைப் பதின்மடங்கு பெருக்கியிருப்பதாகச் சொன்னான். பின்பு அரசன் வேளாளனை யழைப்பித்து வினவ, அவன் அங்கிருந்தே தன் கருப்பந் தோட்டத்தைக் காட்டி இது என் பொருளீட்டம் என்றனன். அரசன் இது செழித்த தோட்டமேயாயினும் வணிகனீட்டிய பொருளிற் பத்திலொரு பங்கிற்கேனும் இணையாமோவென வேளாளன் அவன் பொருள் இதன்விலையிற்பத்திலொருபங்கிற்கும் இணையாகாதென்றான். அரசன் அதனைக்கேட்டு வேளாளனை இகழ்ந்துரைக்க, அவன் தன் தோட்டத்திலிருந்து ஒரு கரும்பைக் கொணர்ந்து அரசன் முன்னிலையில் அடித்து முறித்தனன். அதிலிருந்து முத்துக்கள் தெறித்தன. அரசன் அம்முத்துக்களை நோக்கி ஒவ்வொன்றும் மிக்க விலைபெறுமென்பதை யறிந்து மகிழ்ந்து அவ்வேளாளனுக்கு முத்து என்றும் அக்கரும்படித்த விடத்திற்கே முத்தடித்த களமென்றும், அங்குள்ள அம்பிகைக்கு முத்து நாச்சியம்மனென்றும் அந்நாட்டுக்கு முத்துநாடென்றும் பெயர் புனைந் தனன் என்ப. இச்செவி வழிநிலைச் செய்தி இங்கே கருதத்தக்கது. 1. "உடையு மொலியலுஞ் செய்யை" என்பதனால், (பரி. 19 : 97) முருகனுக்கு வெண்டுகில் உரித்தன்றென்றார். 2. (அ) "ஆல மென்ன வனலென்ன வந்தகன், ஞால மெல்லா நடுங்கக் கொதித்திடும், வேலை வெங்கன லென்ன வெகுண்டுவெங், காலனன் னவற் கின்ன கழறினான்" (ஆ) "என்னை யேவுதி யென்னி லிராவணன், றன்னை நானுயி ருண்பன்" இராமா. திக்குவிசய. 72 - 73. (இ) "அந்தக னத்துணை யமைச்ச னாகிய, வெந்திறற்காலனை விளித்துக் காசியி, லந்தண னொருமக னவன தாவியைத், தந்திடு கென்றலுந் தரணி யெய்தினான்" (ஈ) "போன காலனு மறலியை வணங்கியே புகுந்த, பான்மையாவையு முரைத்தலும்" கந்த. மார்க்கண்டேய. 216, 226. (உ) "கடையுகத்திடியிற்பாய கடற்படை வடக்குவாயிற், (பிரதிபேதம்)1புகுத்தினரென்க, 2கூற்றுவனேவலாள், அவ்வழி.
|