அச்செல்வனுக்குத் தீதின்றிப்பொலிவானவாகவென்று உட்கொண்டு, தெய்வத் திற்குச் சிறப்புக்களைச் செய்தற்கு அவனுடைய கேடில்லாத குடியின்பின்பு தோன்றிய பெரியகுடியிற் பிறந்த ஆயரும், ஒருங்குநிறைந்த செருக்கினையுடைய உவகையராய்ச் சேரக்கூடி, ஏறுதழுவுங்காற் பிறர்க்குத் துன்பம் நிகழுமென்னும் வருத்தமில்லாத உள்ளத்தோடே நிறைந்து ஏறுகளை ஆராய்ந்து, வள்ளிய உருண்ட நேமிப்படையவன் ஊதிய சங்குபோலத் தெள்ளிதாக விளங்குஞ் சுட்டியையுடைத் தாகிய நெற்றியையுடைய கரிய ஏற்றையும், (1) நம்பிமூத்தபிரானுடைய திரு மார்பில் ஒள்ளிய சிவந்த (2) மாலை போல ஒளிமிகும்படியாக ஒப்புமிகநீண்டு பொருந்திய சிவந்தமறுவினையுடைய வெள்ளியஏற்றையும், பெரிய 1பெயரை யுடையகணிச்சிப்படையினை யுடையவனுடைய நீலமணிபோலுந் திருமிடற்றில் அழகுபோலக் கரிய சர்ச்சரையையுடைய கழுத்தினையும் ஏந்தினகுட்டேற்றி னையுமுடைய (3) குரால் நிறத்தினையுடைய ஏற்றையும், வருத்தமுடைய வச்சிரப்படையையுடையோனுடைய ஆயிரங் கண்களையொக்குந் திரட்சிகொண்ட பலவாகிய புள்ளிகனையுங் கடிய 2சினத்தையுமுடைய நிறத்தையுடைய ஏற்றையும், முருகனுடைய உடையாய்த் தாழ்ந்த விளங்குகின்ற வெள்ளியது கிலையொப்ப நன்றாய் உயர்ந்த வெள்ளிய கால்களையுடைய சிவந்த ஏற்றையும், 3காலனது வலிபோலும் வலியையுடைய பிற ஏறுகளையும், சால நிறைகின்ற பல்லுயிர்களை உண்ண வேண்டி ஊழித்தீயும் கணிச்சியும் காலனும் கூற்றவனும் அவ்வுயிர்களை விடாமற்செல்கின்ற ஊழிமுடிவாகிய காலத்தே அவை சேரச் சுழன்று திரியுமாறுபோலச் சுழன்று, திரியும்படி தொழுவிடத்தே சேரப் 4புகுதவிட்டார். எ - று. பார்பயந்தன கடல்பயந்தனவென இரண்டிற்கும் பயந்தன என்னுந் தொழிற்பெயரைக் கூட்டுக. இனிப் பார் (வளர்முத்தம்) -(4) நிலத்தில் வளர்ந்த
1. இந்நூற்பக்கம் 144 : 2 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. "கொடுமிட னாஞ்சிலான் றார்போன் மராத்து, நெடுமிசைச் சூழு மயிலாலுஞ் சீர" கலி. 36 : 1 - 2. 3. குரால்நிறம் - கபிலநிறம்; "குராலான் படுதுய ரிராவிற்கண்ட, வுயர் திணை யூமன் போலத், துயர்பொறுக் கல்லேன்" குறுந். 224. 4. முன்பொருகாலத்துப் பாண்டியனவையிற் பொருளீட்டுதற்குச்சிறந்த வழியாதென்று கேள்வி வந்தது. அப்போது ஒரு வணிகன் வாணிகஞ் செய்தலென்றும் ஒரு வேளாளன் பயிர்செய்தலென்றும் கூறினார். அரசன் அவ்விருவருக்கும் சிறிது பொருளுதவி இதனைக்கொண்டு நீங்கள் கூறியவழியால் பெரும்பொரு ளாக்குகவென்று விடுத்துச் சிலயாண்டு கழித்துத் தன் றூதரை நோக்கி அவர் நிலையை வினாவினான். (பிரதிபேதம்)1பெயரையுமுடைய, 2சினத்தையுமுடைய, வேற்றையும் 3காலதுவலி, 4புகுதவிட்டார். எ - று: பயந்தன கடல்பயந்தன.
|