பக்கம் எண் :

668கலித்தொகை

பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற் றணிபோல
விரும்பிண ரெருத்தி னேந்திமிற் குராலு
15

(1)

மணங்குடை வச்சிரத்தோ னாயிரங் கண்ணேய்க்குங்
கணங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும்
1வேல்வலா னுடைத்தாழ்ந்த விளங்குவெண் டுகிலேய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண்காற் சேயுங்
கால முன்பிற் பிறவுஞ் சால
20மடங்கலுங் கணிச்சியுங் (2) 2காலனுங் கூற்றுந்
தொடர்ந்துசெல் லமையத்துத் துவன்றுயி ருணீஇய
வுடங்குகொட் பனபோற் புகுத்தனர் தொழூஉ

எ - து: அரசுகள் 3படும்படியாக வென்று கொன்று நெறியாலே கொண்டுவந்த தலைமைமிகுகின்ற 4சிறப்புக்களையுடையோனுடைய பழைதாகிய குடிக்குரித்தென்றுகூறிய, பாண்டிமண்டலம் பயந்த விளைவுகளும் ஒலிக்குங் 5கடலில் வளர்ந்த முத்தத்தோடே மற்றும் பயந்த பொருள்களும் (3) மூன்று 6முரசமுங் கெழுமும் முதிய குடியிற்பிறந்த மாறுபாடு மிகுகின்ற


"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" கலி. 26 : 1. (ஈ) "காதொரு குழையோ னிளவலை" வில்லி. இராசசூய. 141. (உ) "எரிமணிக் குன்றிரண் டென்ன வேந்துதோ, ளொருகுழை யொருவனும்"
(ஊ) "கங்கையிற் றிருவ மாநகர், வரவொரு குழையினன் வாங்க" (எ) செக்கர்மாமணி, யொருகுழை யுலாவரு வுலங்கொடோனினான்" (ஏ) "திருநகர்........................கங்கையில் வீழ்தல் போன்றுமற், றொருகுழை
யவன்வலியுணர்த்து கின்றதால்" பாக. (10) அக்குரூரன் வந்த. 22. சாம்பன்மணம்புரி, 50, 53, 54. என வருபவையும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) "காலமுன்ப" புறம். 23 : 17. (ஆ) "ஆற்றல் காலனோ டொக்கும்....................கேள்வியன்" பெருங். (1) 36 : 100 - 102. (இ) "வெந்திறற் காலனை" கந்த. மார்க்கண்டேய. 216.

2. (தென் புலத்திறைவன்) "நெற்றியிற் காலன் செல்ல நீள்பெருங்கால பாச, மற்றைவெங் கால தண்டம் வந்திரு மருங்குஞ் செல்ல, வுற்றபே ரூழிக்காலத் துருத்திர மூர்த்தி யொப்பச், சுற்றிய சேனையோடுந் தோன்றின னுலகத் துட்க" இராமா. திக்குவிசயப். 66.

3. "முரைசுமூன் றாள்பவர்" கலி. 132 : 4. என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1வேல்லல்லான், 2காலமுங்கூற்றும், 3அரைசுகளம்படும்படியாக, 4சிறப்புக்களையுடைய பழைதாகிய, 5கடல்விளைந்தமுத்தத், 6முரசுங்கெழுமும்.