பக்கம் எண் :

நான்காவது முல்லை667

சீர்மிகு சிறப்பினோன் (1) றொல்குடிக் குரித்தெனப்
பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த
5

(2)
(3)
வார்கலி 1யுவகைய ரொருங்குடன் கூடித்
தீதின்று பொலிகெனத் தெய்வக் கடியயர்மார்
வீவில் குடிப்பி னிருங்குடி யாயருந்
தாவி லுள்ளமொடு துவன்றி யாய்புடன்
வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத்
10 (5)தெள்ளிதின் விளங்குஞ் (4) சுரிநெற்றிக் காரியு
2மொருகுழை யவன்மார்பி லொண்டார்போ லொளிமிகப்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்

57. நச். (ஆ) ''அரசுபடக் கடந்த வானாச் சீற்றத்தவன்'' பரி. 22 : 3. (இ) ''அரைசுபடக் கடக்கு முரைசா றோன்றல்'' புறம். 211 : 6.

1. ''நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென, வரைய சாந்தமுந் திரைய முத்தமு, மிமிழ்குரன் முரச மூன்றுட னாளுந், தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே'' புறம். 58 : 10 - 13.

2. ''தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய, நல்லினத் தாயர்'' கலி. 104 : 5 - 6.

3. இப்பகுதி 'தூவி லுள்ளமொடு' என்றும் படிக்கும்படி ஒரு பிரதியி லுள்ளது; தாவென்னுஞ் சொற்போலவே தூவென்னுஞ் சொல்லும் வருத்தமென்னும் பொருளை யுடையதாயின் மோனை நயமுற, ''தூவிலுள்ளமொடு'' என்றும் கொள்ளலாம்.

4. ''சுரிநெற்றிக் காரி'' கலி. 101 : 21.

5. (அ) பலராமன் யமுனையால் அளிக்கப்பட்டதும் மிகச் சிறந்ததுமான ஒரு குண்டலத்தை அணிந்தனனென்பது புராணகதை; (ஆ) அவனிலையைக் கூறுவதாகிய ''கண்களியா'' என்னு முதலையுடைய வெண்பாவிலுள்ள 'ஒண்குழையொன் றொல்கி யெருத்தலைப்ப' என்பதை இனைத் தெனவறிந்தபொருள்வினைப்படுதொகுதியின் உம்மைபெற்று வருமென் பதற்கு மேற்கோள்காட்டி, (தொல். கிளவி. சூ. 33) சேனாவரை யரும் (நேமி. சொல். 11) நேமிநாத வுரைகாரரும் (நன். பொது. சூ. 48) மயிலைநாதரும் 'ஒன்றும்' எனற்பாலது, 'ஒன்று' என உம்மை யின்றி வந்தது செய்யுள் விகாரமென்றும் (தொல். கிளவி. சூ. 33) நச்சினார்க் கினியார் (குழை) ஒன்றேனும் இனைத்தென அறிந்தபின் உம்மை வேண்டும்; அது விகாரத்தாற் றொக்கதென்றும் எழுதியிருப்பவையும் இவன் ஒரே குழையினனென்பதை வலியுறுத்தும். (இ)

(பிரதிபேதம்)1உவகையார், 2ஒருகுழை யொருவன் மார்பினொண்டார்.