58 | கோட்டினத் தாயர் மகனொடியாம் பாட்டதற் கெங்க ணெமரோ பொறுப்பர் பொறாதார் தங்கண் பொடிவ தெவன்; | 61 | ஒண்ணுதால்; இன்ன வுவகை பிறிதியாதி யாயென்னைக் கண்ணுடைக் கோல ளலைத்ததற் கென்னை மலரணி கண்ணிப் பொதுவனோ டெண்ணி யலர்செய்து விட்டதிவ் வூர்; | 66 | ஒன்றிப் புகரினத் தாயமகற் கொள்ளிழா யின்றெவ னென்னை யெமர்கொடுப்ப தன்றவன் மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் புக்கக்காற் புக்கதென் னெஞ்சு; என, | 71 | பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய வாடுகொ ணேமியாற் பரவுது நாடுகொண் டின்னிசை முரசிற் பொருப்பன் மன்னி யமைவர லருவி யார்க்கு மிமையத் தும்பரும் விளங்குக வெனவே. |
1இஃது ஏறுதழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறுதழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும் அவர் அலர்கூறியது நன் றென்று கூறி, 2அன்றே என்னெஞ்சு கலந்துவிட்டது; இனிஅவர் கொடுப்பதாகக் கூறிய நாளிற் செய்வதென்னென மகிழ்ந்து 3கூற, அதுகேட்ட தோழி யாம் அங்ஙனங் கூடி இனிதிருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வாவெனக் கூறியது. இதன் பொருள். (1) | அரைசுபடக் கடந்தட் டாற்றிற் றந்த முரைசுகெழு முதுகுடி முரண்மிகு செல்வற்குச் |
1. (அ) அரைசு என்பது உயர்திணை யாண்பாலை யுணர்த்தி வருதற்கு 'அரைசுபடக் கடந்தட்டு' என்பது மேற்கோள். தொல். கிளவி. சூ. (பிரதிபேதம்)1இது ஏறுதழுவியவற்றைத் தோழி, 2இன்றே, 3கூறுவதுகேட்ட.
|