| தூர்பெழு துதைபுதை துகள்விசும் புறவெய்த வார்புடன் பாய்ந்தா ரகத்து; |
30 | |
35 | கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக் கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்சேகில் காணிகா செயிரிற் குறைநாளாற் பின்சென்று சாடி யுயிருண்ணுங் கூற்றமும் போன்ம்; |
39 | பாடேற் றவரைப் படக்குத்திச் செங்காரிக் கோடெழுந் தாடுங் கணமணி காணிகா நகைசா லவிழ்பத நோக்கி நறவின் முகைசூழுந் தும்பியும் போன்ம்; |
43 | இடைப்பாய்ந் தெருத்தத்துக் கொண்டானோ டெய்தி மிடைப்பாயும் வேள்ளேறு கண்டைகா வாள்பொரு வானத் தரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பான்மதியும் போன்ம்; |
47 | ஆங்க, ஏறும் பொதுவரு மாறுற்று மாறா விருபெரு வேந்தரு மிகலிக்கண் ணுற்ற பொருகளம் போலுந் தொழூஉ; |
50 | வெல்புக ழுயர்நிலைத் தொல்லியற் றுதைபுதை துளங்கிமி னல்லேறு கொண்ட பொதுவன் முகனோக்கிப் பாடில வாயமகள் கண்; |
53 | நறுநுதா லென்கொலைங் கூந்த லுளரச் சிறுமுல்லை நாறிய தற்குக் குறுமறுகி யொல்லா துடன்றெமர் செய்தா ரவன்கொண்ட கொல்லேறு போலுங் கதம்; |
57 | நெட்டிருங் கூந்தலாய் கண்டை யிஃதோர்சொல்; |