மைஞ்சீ ரடியு முளவென மொழிப'' (1) என்பதனான் மூவகைப் பாவிற்கும் ஐஞ்சீரடிவருதல் பெற்றாம். (4)
105 | அரைசுபடக் கடந்தட் டாற்றிற் றந்த முரைசுகெழு முதுகுடி முரண்மிகு செல்வற்குச் சீர்மிகு சிறப்பினோன் றொல்குடிக் குரித்தெனப் பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த வார்கலி யுவகையா ரொருங்குடன் கூடித் தீதின்று பொலிகெனத் தெய்வக் கடியயர்மார் வீவில் குடிப்பி னிருங்குடி யாயருந் தாவி லுள்ளமொடு துவன்றி யாய்புடன் வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத் |
10 | தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியு மொருகுழை யவன்மார்பி லொன்டார்போ லொளிமிகப் பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும் பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற் றணிபோல விரும்பின ரெருத்தி னேந்திமிற் குராலு |
15 | மணங்குடை வச்சிரத்தோ னாயிரங் கண்ணேய்க்குங் கனங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் வேல்வலா னுடைத்தாழ்ந்த விளங்குவெண் டுகிலேய்ப்ப வாலிது கிளர்ந்த வெண்காற் சேயுங் கால முன்பிற் பிறவுஞ் சால |
20 | மடங்கலுங் கணிச்சியுங் காலனுங் கூற்றுந் தொடர்ந்துசெல் லமையத்துத் துவன்றுயி ருணீஇய வுடங்குகொட் பனபோற் புகுத்தனர் தொழூஉ; |
23 | அவ்வழி, காரெதிர் கலியொலி கடியிடி யுருமி னியங்கறங்க வூர்பெழு கிளர்புளர் புயர்மங்குலி னறைபொங்க நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்பச் சீர்கெழு சிலைநிலைச் செயிரிகன் மிகுதியிற் சினப்பொதுவர் |