பக்கம் எண் :

நான்காவது முல்லை663

எ - து : கெடாத (1) உருமேற்றை மாறுபடுகின்ற முரசினையுடைய அவ்விடத்திற் பாண்டியனுக்கு இவ்வுலகுசேர அவனுடைய ஒரு மொழியைக் கேட்ப தாகவென்று கூறிப் பழைதாகிய கதிரையுடைய சக்கரப்படையை யுடையானை 1வாழ்த்துதும்; அதற்கு நீயும் வருகவென்றாள். எ - று.

ஒருமொழி, ஆணை, தென்னவற்கென்னும் நான்காவது இவ்வுலகம் நடப்பதாகவென்று போந்த பொருளோடு முடியும்.

இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

"ஆயர் வேட்டுவர்" என்னும் (2) சூத்திரத்தில் 2ஆயரிலுங்கிழவருங் கிழத்தியரும் உளரென்றா 3ராதலான், இவர்க்குங் களவொழுக்கம் நிகழு 4மென்பதாம். "நாடகவழக்கினும்" என்னும் (3) சூத்திரத்திற் பாடலுள் அமையாத னவாய்க் களவொழுக்கம் நிகழ்ந்து எறு 5தழுவி வரைவுடன் பட்டாராக் கூறினார். மேலும் இங்ஙனம் களவு நிகழ்ந்து ஏறுதழுவி வரைகின்றதாகக் கூறும் 6பாட்டுக்களுக்கெல்லாம் இதுவே விதியாகக் கொள்க.

இது தரவும் ஐஞ்சீரடிப்பெற்ற குறுவெண்பாட்டும் ஐஞ்சீரடிப்பெற்ற நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரடிப்பெற்ற கொச்சகமும் 7வழியசைபுணர்த்த சொற்சீரடியும் முடுகியலோடு தொடர்ந்த கொச்சக வெண்பாவும் நாற்சீரடி முடுகியலோடு தொடர்ந்து ஐஞ்சீரடியும் வந்த கொச்சகவெண்பாவிரண்டும் ஐஞ்சீரடியும் ஆசிரியத்தளையும் விரவி ஈறு வேறோர் சீரான் இற்ற கொச்சக வெண்பாவும் 8ஐஞ்சீரடுக்கியவற்றிற் குறுவெண்பாட்டும் ஐஞ்சீரடுக்கிய நெடுவெண்பாட்டிரண்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுவந்த கலிவெண் பாவின்வேறுபட்ட (4) கொச்சகம். ''வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு,


1. (அ) ''உருமிடி முரசமொடு'' (ஆ) ''இடிமுரசியம்ப'' (இ) ''இடியுமிழ் முரசம்'' (ஈ) ''இடியென முழங்கு முரசின்'' (உ) ''உருமின் முரசெழுந் தியம்ப'' (ஊ) உருமுரற் றன்ன வுட்குவரு முரசமொடு'' (எ) ''உருமி னிரங்கு முரசின்'' (ஏ) ''முரசம்....................உருமி னுரறுபு சிலைப்ப'' (ஐ) "உருமிசை முரசம்" (ஒ) "முரசிடியுமிழ் தழங்கென முழங்க" (ஓ) ''உருமி னிடிமுர சார்ப்ப'' என முரசினொலிக்கு உரு மொலி உவமையாய் வருதல் காண்க.

2. தொல். அகத். சூ. 21.

3. தொல். அகத். சூ. 53.

4. (அ) ''மலிதிரை யூர்ந்து'' என்னு முல்லைப்பாட்டுள், ''இரிபெழு பதிர் பதிர் பிகந்துடன் பலர் நீங்க'' 'தாளெழு துணிபிணி யிசைதவிர் பின்றி' எனவு முடுகுதலிற்கொச்சகமாயிற்று; இதனுட் சொற்சீரடியும் வந்தது என்பர். நச்; தொல். செய். சூ. 155. (ஆ) இச்செய்யுள்

(பிரதிபேதம்)1வாழ்த்துமதற்கு, 2ஆயரிலுங் கிழத்தியரும், 3ஆதலின், 4மென்பதூஉ நாடக, 5தழுவ வரைவு, 6பாட்டுக்களுக்கு மிதுவே, 7வழியசைப் புணர்த்த, 8ஐஞ்சீரடுக்கிய வெண்பரட்டிரண்டுந் தனிச் சொல்லும்.