53 | 1நறுநுதா லென்கொ (1) லைங் கூந்த லுளரச் சிறுமுல்லை நாறிய தற்குக் 2குறுமறுகி யொல்லா துடன்றெமர் செய்தா ரவன்கொண்ட கொல்லேறு போலுங் கதம் |
எ - து: நறிய நுதலினையுடையாய்! ஐவகைப்பட்ட கூந்தலை ஆற்ற அது (2) வெண்ணெயின் நாற்றம் நீங்கிச் சிறிய முல்லைப்பூவின் நாற்றம் மேவி மிக நாறியதற்கு 3எம்முடைய சுற்றத்தார்பொருந்தாதே 4அண்ணிதாக மனஞ் சுழன்று மாறுபட்டு அவன் தழுவின கொல்லுகின்ற ஏறுபோலுங் கோபத்தினைச்செய்தார்; அன்று அவர் இங்ஙனங் 5கோபித்தது என்னபயனையுடைத்தாயிற்றென்றாள்.எ - று. இது தலைவியைநோக்கிக் கூறியது. 57(3) | நெட்டிருங் கூந்தலாய் கண்டை 6யிஃதோர்சொல்; கோட்டினத் தாயர் மகனொடியாம் 7பாட்டதற் கெங்க ணெமரோ பொறுப்பர் பொறாதார் தங்கண் பொடிவ தெவன் |
எ - து: நெடிய கரிய கூந்தலையுடையாய்! இன்னும் யான்கூறுகின்ற ஈதொரு சொல்லையும் நெஞ்சால் ஆராய்ந்துபாராய்; கொம்பையுடைய வாகிய எருமையினத்தை யுடைய ஆயர்மகனோடே யாங் 8கூடியதற்கு எம்முடைய கூற்றத்தாரோ இன்னும் பொறுப்பர்; அதுபொறாத அயலார் 9தம்முடைய கண்கள் எங்கண்களை நோக்கித் தீய்ந்துபோவது என்னபயனை 10யுடைத் தென்றாள்.எ - று. 61
(5) | ஒண்ணுதால் இன்ன வுவகை பிறிதியாதி (4) யாயென்னைக் கண்ணுடைக் கோல ளலைத்ததற் கென்னை |
1. இந்நூற்பக்கம் 586 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. பாலையும் வெண்ணெயையும் நெய்யையும் தந்தலையில் தடவிக் கொள்ளுதல் ஆய்ச்சாதியாருக்கு இயல்பு. 3. "நெட்டிருங் கூந்தற் கடவுளர்" கலி. 93 : 35. 4. "அன்னை, யலையு மலைபோயிற்று" ஐந்திணையெழு. 3 5. (அ) "நுண்ணிய மென்பா ரலைக்குங்கோல் காணுங்கால், கண்ணல்ல தில்லைபிற" என்பதும், 'நுண்ணிய மென்றிருக்கு மமைச்சரை அரசர் (பிரதிபேதம்)1நறுநுதலா யென்கொலைங் கூந்தலுளாயச், 2குறுமறுகுபொல்லாது, 3நம்முடைய, 4அண்ணிதாக அண்ணிதாக மனம், 5கோபித்தென்ன பயனை, 6இஃகுதோர், 7பட்டதற்கெங்கண், 8கூடியவதற்கு, 9தம்முடைய தங்கண்கள், 10உடைத்தென்னத் தலைவியைநோக்கிக்கூறினாள், ஒன்னுதால்.
|