பக்கம் எண் :

676கலித்தொகை

மலரணி கண்ணிப் பொதுவனோ டெண்ணி
யலர்செய்து விட்டதிவ் வூர்

எ - து: அதுகேட்ட தலைவி, ஒள்ளிய நுதலினையுடையாய்(1) யாய் தன் கண்களுடையவாகிய கோலை 1யுடையளாய்என்னைவருத்தியதற்கு இவ்வூர் என்னை மலரணிந்தகண்ணியை யுடைய பொதுவனோடே கூட்டமென்றெண்ணி (2)அலரையுண்டாக்கிவிட்டது; இத்தன்மைத்தாகியஉவகைநமக்கு வேறியாது தானென மகிழ்ந்து கூறினாள். எ - று. 

அலைக்குங்கோலின் காரியத்தைக் கண்கள்செய்தமைபற்றிக் கண்களுடையவாகிய கோலென்றாள்.

66  ஒன்றிப் புகரினத் 2தாயமகற் கொள்ளிழா
யின்றெவ னென்னை யெமர்கொடுப்ப தன்றவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக்கோட்டிடைப்
புக்கக்காற் புக்கதென் னெஞ்சு

எ - து: அங்ஙனம் கூறியபின்னரும் ஒள்ளியஇழையினையுடையாய் ! தன்மேல் மிக்குச்சென்றசிவந்த கரிய ஏற்றினுடைய கோட்டிடையிலேஇற்றைநாள் 3அவன்செல்ல என்னெஞ்சும்உடன்சென்றது;இனிநஞ்சுற்றத் தாரெல்லாரும் பொருந்திப்புகரையுடைய பசுந்திரளையுடைய ஆய்ச்சாதியிற்பிறந்த மகனுக்கு என்னைக்கொடுப்பதாக அறுதியிட்டஅற்றைநாளிற் கொடுக் கின்றது என்னபயனையுடைத்தென்று தலைவி மகிழ்ந்து கூறினாள். எ - று.

என (3)


அலைக்குங்கோலாவது கண்ணெனவுரைத்துத்தன்வெகுளிநோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிகவென்பது கருத்தாக்கு வாருமுளர்' எனப்பரிமேலழகர் பிறர்கோட் கூறி யிருத்தலும் (குறள்.710) (ஆ) "கொந்தார் மலர்க்குழல் வல்லிநம்மன்னை குரிசில்வந்த, செந்தா மரையடிகண்டனள் போலுமித் திண்சிலம்பில், வந்தாரெவரென வந்தார் சிலரிலர் மற்றிங்கென்றே, னொந்தா ணெடிதுயிர்த் தாள்கொடிதாயென்னை நோக்கினளே" (அம்பிகாபதிகோவை.239) என்பதும் ஈண்டு அறிதற்பாலன.

1. யாய் - என் தாய். "யாயு ஞாயும் யாராகியரோ" குறுந். 40

2. "களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற்காமம், வெளிப்படுந் தோறு மினிது" குறள்.1145.

3. எனவென்பது, இங்கே அசைநிலை.

(பிரதிபேதம்) 1உடையாயாய், 2ஆயர்மகற்கு, 3இவன்செல்ல.