6 | அவ்வழி, நீறெடுப்பவை நிலஞ்சாடுபவை மாறேற்றுச் சிலைப்பவை மண்டிப்பாய் பவையாய்த் துளங்கிமி னல்லேற் றினம்பல களம்புகு மள்ளர் வனப்பொத் தன; |
11 | தாக்குபு தம்முட் பெயர்த்தொற்றி யெவ்வாயும் வைவாய் மருப்பினான் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய வேறெல்லாம் பெய்காலைக் கொண்ட னிரையொத் தன; அவ்வேற்றை; |
16 | பிரிவுகொண் டிடைப்போக்கி யினத்தோடு புனத்தேற்றி யிருதிறனா நீக்கும் பொதுவ ருருகெழு மாநில மியற்றுவான் விரிதிரை நீக்குவான் வியன்குறிப் பொத்தனர்; |
20 | அவரைக், கழல வுழக்கி யெதிர்சென்று சாடி யழல்வாய் மருப்பினாற் குத்தி யுழலை மரத்தைப்போற் றொட்டன வேறு; |
23 | தொட்டதம், புண்வார் குருதியாற் கைபிசைந்து மெய்திமிரித் தங்கார் பொதுவர் கடலுட் பரதவ ரம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு; |
26 | ஏறுதங், கோலஞ்செய் மருப்பினாற் றோண்டிய வரிக்குடர் ஞாலக்கொண் டெழூஉம் பருந்தின் வாய்வழீஇ யாலுங் கடம்பு மணிமார் விலங்கிட்ட மாலைபோற் றூங்குஞ் சினை; ஆங்கு; |
31 | தம்புல வேறு பரத்தர வுய்த்தத மன்புறு காதலர் கைபிணைந் தாய்ச்சிய ரின்புற் றயர்வர் தழூஉ; |
34 | முயங்கிப் பொதிவே முயங்கிப் பொதிவே முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவேங் கொலையேறு சாடிய புண்ணையெங் கேளே; |