37 | பல்லூழ் தயிர்கடையத் தாஅய புள்ளிமேற் கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப் புல்லலெந் தோளிற் கணியோவெங் கேளே; | 40 | ஆங்கு, போரேற் றருந்தலை யஞ்சலு மாய்ச்சிய காரிகைத் தோள்கா முறுதலு மிவ்விரண்டு மோராங்குச் சேற லிலவோவெங் கேளே; | 43 | கொல்லேறு கொண்டா னிவள்கேள்வ னென்றூரார் சொல்லுஞ்சொற் கேளா வளைமாறி யாம்வருஞ் செல்வமெங் கேள்வன் றருமோவெங் கேளே; ஆங்க; | 47 | அருந்தலை யேற்றொடு காதலர்ப் பேணிச் சுரும்பிமிர் கானநாம் பாடினம் பரவுது மேற்றவர் புலங்கெடத் திறைகொண்டு மாற்றாரைக் கடக்கவெம் மறங்கெழு கோவே. |
இது தத்தம் இனம் தத்தம்புலத்துப் பிரிப்பான்புக்கவர்ஏறுகொண்டவாறு கண்டு 1ஆய்ச்சியர்தங்காதன்மிகுதியால் 2தங்காதலரைக்கைபிணைந்து குரவையாடித் 3தென்னன்வாழ்கெனக் கானம்பாடியது. இதன் பொருள். (1) | கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் ணிமிழிசை மண்டை யுறியொடு தூக்கி |
1. "கொன்றையந் தீங்குழல்.................கேளாமோ தோழீ" (சிலப். 17. 'கன்றுகுணிலா') என்னும்தாழிசைகளின் விசேடவுரையில், "கொன்றை ஆம்பல் முல்லை என்பன சிலகருவி. இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின் அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றை என ஒருபண்இல்லை யாதலா(...........) னும் கலியுள் முல்லைத் திணையின்கண் ஆறாம்பாட்டினுள், இப்பாட்டில் 'கழுவொடு................வியன் புலத்தர்' எனக்கருவி கூறினமையானும் (அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற், கன்றின் குரலுங் கறவை மணிகறங்கக், கொன்றைப் பழக்குழற் கோவலராம்பலு, மொன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்' என வளையாபதி யுள்ளும் கருவி கூறிப் பண்கூறுதலாலும் இவை ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவந்த வொத்தாழிசையாகலானும் இரண்டு பண்ணும் (பிரதிபேதம்)1ஆச்சியர், 2தங்கினகாதலரை, 3தென்னவன்வாழ்கென.
|