யொழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர் 1வழூஉச்சொற் கோவலர் தத்த மினநிரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் 2புலத்தார் எ - து: பால் பற்றறச் சீவுதலைச்செய்த (1) கறவைக்கலங்கள் வைத்த உறியோடே தோற்பையிடத்தே கழுவோடேசூட்டுக் கோல்களையும் இட்டுச் சுருக்கிய பைகளையுந் தூக்கி நீளவளாநத கொன்றைக்காயைத் திறந்து சமைத்த இனிய குழலில் உண்டான ஓசையராய் வழுவின சொல்லையுடைய 3கோவலர் தம்முடைய தம்முடைய இனமாகிய பசுக்கள் கார்காலத்தோடே தோன்றின அப்பொழுது வரும் மழையாலே நனைந்த அகற்சியையுடைய நிலத்திடத் தாராயினார். எ - று. பழிசை 4பாடமாயின், பழித்தலையுடையதென்க. பழித்தலையுடையது பழிசை. முரற்சியர் என்னும் எச்சம் உடையவென்னும் வினைக்குறிப்போடு 5முடிந்தது. (2) கழுவாவது கறத்தற்கரிய பசுக்களைக் கறத்தற்கு இரண்டு தலையுஞ் சீவி மாலையாகக்கட்டிக் கழுத்தில் இடுவது. 6 (3) | அவ்வழி நீறெடுப்பவை நிலஞ்சாடுபவை மாறேற்றுச் சிலைப்பவை மண்டிப்பாய் பவையாய்த் |
ஒன்றுகருவியுமாகக் கூறின் செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறாலானும் அங்ஙனங்கூறுத லமையாதென்க" என்று அடியார்க்கு நல்லார் எழுதியிருப்பது ஈண்டு அறிதற்பாலது. 1. "திண்கா லுறியன் பானைய னகலன்" அகம். 274 : 6. 2. (அ) "நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக், குளம்புங் கோடும் விளங்கு பொன் னுறீஇத், தளையுந் தாம்பு மளைகடை மத்துங், கழுவுங் கலனும் வழுவில பிறவும், பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக், குன்றாக் கோடி கொடுத்துவப் போரும்" பெருங். (1) 39 : 64 - 49. (ஆ) "கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமின்" (தொல், புறத். சூ. 3. நச்மேற் என்பவற்றில் இச்சொல் வருதல் காண்க. 3. (அ) "அடியிட்டு நிலங் கிளைத்தண்டமெண் டிக்கும் போர்ப்பப், பொடியிட்டுயிர்த்துப் பொருகோட்டினிற் குத்திக் கோத்திட், டிடியிட்டதிர்கா ரெதிரேற்றெழுந் தாங்கு நோக்கிச், செடியிட்டிருகண் ணழல் சிந்த நடந்த தன்றே" திருவிளை. மாயப்பசுவை. 17. (ஆ) கானிலங் (பிரதிபேதம்)1வழுச்சொல், 2புலத்தர் எ - து : கழுவாவது........கழுத்திலிடுவது பால் பற்றறச், 3கோவர் தம்முடைய, 4பாடமாயின் பழித்தலையுடையது பழிசையாம் முரற்சியா ரென்னும், 5முடிந்தது அவ்வழி.
|