துளங்கிமி னல்லேற் றினம்பல களம்புகு மள்ளர் வனப்பொத் தன எ - து: அவ்விடத்துத் துளங்குகின்ற குட்டேற்றினையுடைய நல்ல ஏற்றினங்கள் பலவும் முன்பு காலாலே வெட்டி நீற்றை எழுப்புமவை இப்பொழுது (1) மழைபெய்தமையிற் (2) கோட்டுமண் கொள்ளுமவை ஒன்றோ டொன்று மாறுபடுதலை மேற்கொண்டு முழங்குமவை மிக்குப்பாயுமவையாய்ப் போர்க்களத்தே 1செல்லும் வீரர் அழகையொத்தன. எ - று. 11 தாக்குபு தம்முட் பெயர்த்தொற்றி யெவ்வாயும் வைவாய் மருப்பினான் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய வேறெல்லாம் பெய்காலைக் கொண்ட னிரையொத் தன எ - து: ஒன்றோடொன்று தாக்கி மீண்டு அடிப்பறித்துச்சேர்ந்து கூரிய இடத்தையுடைய கொம்பாலே மாறாமல் எவ்விடத்துங் குத்துகையினாலே மெய்யினின்றும் வடிகின்ற குருதியையுடைய 2ஏறுகளெல்லாம் நாட்காலைப் பெய்யும் 3மேகநிரையையொத்தன. எ - று. நாட்காலைமேகம் சிவந்திருத்தலின், உவமையாயிற்று. பெய்யு மேகம் அதற்கு அடைகூறிற்று. 15 அவ்வேற்றை பிரிவுகொண் டிடைப்போக்கி யினத்தோடு புனத்தேற்றி யிருதிறனா நீக்கும் பொதுவ
கீறி வான்மிசை யுயர்த்துக் கதிர்மணி மருப்பிடை நோக்கி, யானிள வேறா யடுசமர்க் கெழுந்தா னசனியே றென்னவோ ரவுணன்" பாக. (10) ஸ்ரீ நாரதர். 4. 1. "பெயல, கடுநீர் வரித்த செந்நில மருங்கின், விடுநெறி யீர்மணல் வாரணஞ் சிதறப், பாம்புறை புற்றத் தீர்ம்புறங் குத்தி, மண்ணுடைக் கோட்ட வண்ண னல்லேஎ, றுடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ, யூர்வயிற் பெயரும் பொழுதில்" அகம். 64 : 7 - 13. 2. (அ) "கோட்டுமண் கொண்ட மார்பம்" சீவக. 2294. (ஆ) "கோட்டு மண் கொள்ளா முலை" முத்............... (இ) "கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள்" நள. சுயம் .102. (ஈ) "கோட்டுமண் கொண்டு" கூர்ம. ஆதவர்சிறப்பு. 8. (உ) "கோட்டுமண் கொள்ளும் வேழம்" தணிகை. வீராட்ட. 62. (பிரதிபேதம்)1கொல்லும் வீர, 2ஏறெல்லாம், 3மேகநிரையொத்தன.
|