ருருகெழு (1) மாநில மியற்றுவான் 1விரிதிரை நீக்குவான் வியன்குறிப் பொத்தனர் எ - து: 2அவ்வேறுகள் போர்செய்யாமற் பிரிதலைத் தாம் உட்கொண்டு அவை இரண்டு கூறாக நீங்கும்படி நடுவே சிலஏறுகளைச்செலுத்தி விலக்கிப் பின்னர்ப் பசுத்திரளோடே மேயும்புலத்திலே ஏற்றித் தத்தம் இனங்களைப் பிரிக்கும் இடையர் பழையவடிவுகளெல்லாங்கெழுமும்படி பெரியநிலத்தைப் 3படைத்தற்கு அகற்சியையுடைய கருத்தினையுடைய, (2) அந்நிலத்தை மறைத்துக்கிடந்த கடலைப் போக்கும் நான்முகனையொத்தார். எ - று. ஏற்றையென்றது ஏற்றிற்கு ஐகாரவீற்றதோர்பெயர்; "ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லா, மேற்றைக் கிளவி யுரித்தென மொழிப" (3) என்றலின். 20 | அவரைக், (4)கழல வுழக்கி யெதிர்சென்று சாடி யழல்வாய் மருப்பினாற் குத்தி (5) யுழலை மரத்தைப்போற் றொட்டன வேறு |
எ - து: அங்ஙனம் நீக்குகின்றவர்களை அவ்வேறுகள் ஓடும்படி மிதித்து ஓடாமல் நின்றவர்களை எதிர் சென்று அழலுகின்ற இடத்தையுடைய கொம்பாலே குத்திச் சாடி உழலைகோத்த மரத்தைப்போலத் துளைத்தன. எ - று.
1. (அ) "மாறி யுலகம் வகுத்தநாள் வரம்பு கடந்து மண்முழுது, மேறி யொடுங்கு மெறிகடல்போ லெயின்மா நகர மெய்தினார்" (ஆ) "தேர் செலும் வேகத்து வேலைநீ, ரோங்கு நாளி னொதுங்கு முலகுபோற், றாங்க லாற்றகில் லார்தடு மாறித்தா, நீங்கினார்" 2. "உரைசெய் நான்முக னுறங்குழிப் புவிகொள வொருங்கே, திரைசெய் வான்கடல் சென்றெனச் சென்றது சேனை" கந்த. திக்கு. 10. 3. தொல். மரபி. சூ. 49. 4. "கோவலர், கழலக் காடுபோய்" சீவக. 422. 5. உழலைமரம், தொழுவமுதலியவற்றுள் மாடுகளைப்புகாமல் தடுப்பதற்கு அவற்றின் வழியில் இருபக்கத்தும் உழலையை (கழிகளை) இழுத்துப் போடும்படி துளைத்துநிறுத்தியிருக்கும் மரம்; இது கடப்புக்காலென வழங்கும். "கன்று தாம்பரிந், துழலை பாய்ந்துலா முன்றில்" என்பது சிவக. 422. (பிரதிபேதம்)1விரைதிரை, 2ஏற்றையென்றது...........என்றலின் அவ்வேறுகள், 3படைத்தற்கு இந்நிலத்தை மறைத்துக்கிடந்த அகற்சியையுடைய கடலைப் போக்குங் கருத்தினையுடைய நான்முகனையொத்தார், அவரைக்.
|