23 தொட்டதம், புண்வார் குருதியாற் கைபிசைந்து மெய்திமிரித் தங்கார் பொதுவர் கடலுட் பரதவ (1)ரம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு எ - று: பொதுவர் அங்ஙனந் துளைத்த தம்முடைய புண்களினின்றுஞ் சோருகின்ற குருதி வழுக்குதலாலே மணலை அள்ளிக் கையைப் பிசைந்து 1உடம்பையுந் (2) திமிர்ந்து தாழ்க்க நில்லாராய்க் கடலுக்குள்ளே பரதவர் (3) சிறிய தெப்பத்தை ஏறினாற்போல ஏற்றைத் தழுவினார். எ - று. 26 ஏறுதங், கோலஞ்செய் மருப்பினாற் றோண்டிய வரிக்குடர் ஞாலக்கொண் டெழூஉம் பருந்தின் 2வாய்வழீஇ யாலுங் கடம்பு மணிமார் விலங்கிட்ட மாலைபோற் றூங்குஞ் சினை எ - து: அவ்வேறுகள் தம்முடைய அழகுசெய்கின்ற கொம்பாலே தோண்டிய வரிகளையுடைய குடர்கள் நான்று விழும்படி எடுத்துக்கொண்டு உயர்ந்துபோம் பருந்தின் வாயினின்றுந் தப்பி ஆலமரத்தையுங் 3கடப்ப மரத்தையும் (4) ஆண்டு உறையுந்தெய்வங்கட்கு 4மகிழ்ச்சியுண்டாகவேண்டி அணி தலைச்செய்தற்கு விலங்க இட்டுவைத்த மாலைகள்போலே கொம்பு கடோறுந் 5தூங்காநிற்கும். எ - று. 30 | ஆங்கு தம்புல வேறு பரத்தர வுய்த்தத மன்புறு (5) காதலர் கைபிணைந் 6தாய்ச்சிய ரின்புற் றயர்வர் தழூஉ |
1. "மறை யேற்றின் மேலிருந் தாடித் துறையம்பி, யூர்வான்போற் றோன்று மவன்" கலி. 103 : 38 - 39. 2. திமிர்தல் - பூசுதல்; "திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே" என வருதல் காண்க. திமிருறச் செய்தலென்பாரு முளர். 3. அம்பியென்பது தெப்பத்துக்கும் நீரிற் செலுத்தும் எல்லாக் கருவிகளுக்கும் பெயரென்பவாயினும் ஓரேற்றுக்கு உவமையாய் வருதலிற் சிறியதெப்பமென்று பொருள் கூறினார். "தண்புன லாடுந் தடங்கோட்டெருமை, திண்பிணியம்பியிற் றோன்றுமூர" என்பது ஐங்குறு. 98. 4. இந்நூற்பக்கம் 621 : 6, 622 : 1 - ஆம் குறிப்புக்கள் பார்க்க. 5. குரவை யென்பது: (அ) குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலு, மெய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" (ஆ) "குரவை யென்ப தெழுவர் மங்கையர், செந்நிலை மண்டலக் (பிரதிபேதம்)1உடம்புந்திமிர்ந்து, 2வாய்வழியாலும், 3கடம்பமரத், 4மகிட்சியுண்டாக வேண்டியதணிதலைச்செய்தற்கு, 5தூங்காநிற்கும், தம்புல, 6ஆச்சியர்.
|