பக்கம் எண் :

684கலித்தொகை

எ - து: அப்பொழுது ஆய்ச்சியர் தாம் மேயும் புலத்திலே ஏறுபரத்தலைச் செய்யும்படி செலுத்தின தம்முடைய அன்புமிக்க காதலருடைய கையைக் கோத்து இன்பமுற்றுக் குரவையாடுவர். எ - று.

34
(1)
முயங்கிப் பொதிவே முயங்கிப் பொதிவே
முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவேங்
கொலையேறு சாடிய புண்ணையெங் கேளே

எ - து: எம்முடைய தோழீ! கொலைத்தொழிலையுடைய ஏறுகள் சாடின புண்களைத் தழுவிக்கொண்டு பொதிந்துவிடக் கடவேம்; எங்ஙனந் தழுவுவ தென்று கேட்பாயாயின் முலையின் வெம்மையாலே ஆறும்படி ஒற்றித்தழுவிக் கொண்டு பொதிந்துவிடக் கடவேம். எ - று.


கடகக் கைகோத், தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்" என்னும் (சிலப். பதி. 77. உரைமேற்.) சூத்திரங்களால் தலைவனது காமமும் வென்றியும் தோன்றக்கூறி ஏழுமங்கையர் கைகோத்துச் சுழன்று ஆடுவதென்றே அறியப்படுமாயினும், (சிலப். 3 : 12.) "இருவகைக் கூத்தின்" என்பதன் விளக்க வுரையால், குரவையென்றது: காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது என்று அறியப்படுகின்றது. இவையும் (இ) "மாயவனுடன் றம்முனாடிய, வாலசரிதை நாடகங்களில், வேனெடுங்கட் பிஞ்ஞையோடாடிய குரவை யாடுதும்" (ஈ) மாயவன்றன் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடுங், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, வாய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தெழுதேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே" சிலப். 17. என வருபவைகளும் (உ) "இடவல" என்பதற்கு, 'ஆய்ச்சியரோடு குரவைகோத்தலால் அவர்க்கு இடமும் வலமும் ஆயினோய்' பரி. 3 : 83. என்று எழுதியிருக்கும் உரையும் (ஊ) "நளிதலென்பதற்கு தன்னைச் சேவிக்கு மகளிரொடு குரவையாடிச் செறிதல்" (பதிற். 52 : 16) என்று எழுதியிருக்கும் உரையும் (எ) "பரதவர், வெப்புடைய மட்டுண்டு, தண்குரவைச் சீர் தூங்குந்து" (ஏ) "குறவர் மாக்கள், வாங்கமைப் பழுனிய தேறன் மகிழந்துவேங்கை முன்றிற் குரவை யயரும்" புறம். 24 : 4 - 6, 129 : 1- 3, என வருபவைகளும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) "புண்களைத் தடமுலை வேதுகொண் டொற்றியும்" கலிங்க.உடை.13. (ஆ) "புண்வருத்தந் தன்னைநோக்கிக், கொங்கையையொற் றிடங்கொடுத்து" தனிப்பாடல். என்பவையும் (இ) "கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ" சிலப். 28 : 16. (ஈ) "கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇ" நெடுநல். 69. என்பவையும் இங்கே அறிதற்பாலன.