பக்கம் எண் :

700கலித்தொகை

எ - து: என்று, பின்னர்க் கடைந்தமோரைக் கையால் 1அலைக்கும் ஒசைகேட்கும் அணுமையினாலே தூரம் அன்றாய் ஊர் மிகவும் அணித்தாயின், பொழுது உச்சியம் பொழுதாயின், கண் வேறொரு வடிவை நோக்குதலைத் தவிர்க்கும் அழகைப்பெறுகின்ற பெண்டன்மையினையும் மயிலினுடைய கழுத்தினுடைய நிறத்தையுமுடையமாயோளே ! இப்படி வெய்தாகிய பொழுதோடே விரைந்து செல்லாநின்றாய்; இதனால் மற்றுப் பெறும்பயனென் ? காயாம் பூவையுடைய குளிர்ந்த பொழிலை அவ்விடத்தே பாராய்; அவ்விடத்திற் பிடி துஞ்சுவனவற்றையொத்த 2பாறையிடத்தனவாகிய (1) நுங்கினது வெட்டின கண்ணையொக்கும் (2) நீர்நிறைந்த அண்ணிய சுனைகளிலே ஆடிக் 3குளிர்ச்சியையுடைத்தாகிய பூக்களையுடைய (3)செம்முல்லைமலரோடே முல்லை மலரையும் பறித்துத் தனியே அப்பொழிலிடத்தே எம்முடனே தங்கிப் பொழுது குளிர்ச்சியுண்டாக நும்மூர்க்குச் செல்வாயென்றான். எ - று.

45 இனிச் 4செல்வேம்யாம்

எ - து : அதுகேட்டவள், நீ போகவேண்டா என்கின்றாயாதலின் யாம் போவேமென ஊடல்தோன்றக் கூறினாள் . எ - று.

46(4)மாமருண் டன்ன மழைக்கட்சிற் றாய்த்தியர்
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா வேறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை

முகைத்த முல்லை...................குருதிக் கூரெயிறு கூத்தியர்கட் கொண்ட கொடித் தளவமே” என்பவற்றால் தளவமும் முல்லையும் வேறுவேறு ஆதலை அறிக.

1. “நுங்கின் தடிகண்ணிலுள்ள நீர் சுனையின் நீருக்கும் அதன் நீர்நிறைவு சுனையின் நீர் நிறைவுக்கும் உவமை.

2. “அகளத்தன்ன நிறைசுனைப் புறவின்” மலை. 104.

3. தளவம் செம்முல்லைக்குப் பெயராய்வருதலை (அ) ”சிரல்வா யுற்ற தளவின்” (ஆ) ”புதன்மிசைத் தளவி னிதன்முட் செந்நனை” (இ) ”சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப, வீர்ந்தண்டளவந் தகைந்தன” என்பவற்றாலும் இந்நூற்பக்கம் 699: 6; 699: 7 (2) குறிப்புக்களாலும் அறிக. இது முல்லையென்னும் பொருளிலும் வரும்.

4. தலைவி குறிப்பானன்றிக் கூற்றால் வழிபாடு மறுத்தற்கு, “மாமருண் டன்ன......................நினக்கு” என்பது மேற்கோள்; தொல். களவி. சூ. 20. இளம்.

(பிரதிபேதம்)1அலைக்கும் ஓசைஓசைகேட்கும், 2பாறையிடத்துக்கனவாகிய, 3குளிர்ச்சி, 4செல்வேம், எ - து : அது.