நீயெவன் செய்தி பிறர்க்கு யாமெவன் செய்து நினக்கு |
எ - து: கூறி, பின்னும் 1மான் மருண்டு நோக்கினாலொத்த குளிர்ச்சியை யுடைய கண்ணையுடைய சிறிய ஆய்த்தியராய் நீமயக்கிக் கூறுஞ் சொல்லிடத்தே மயங்குவார்க்கு அம்மொழிகளைக் கூறு; யான் அதற்கு மருளேன்; நீதான் பல பசுக்களையும் தெவிட்டாமற் கூடும் ஏறுபோல நாடோறும் பதின்மரை ஒருவரைப்போலே விருப்பமுற்று அவர்மேற் செல்வாய்; ஒரு கட்குத்தியாகிய கள்வன்; ஆதலால் நீ பிறர்க்கு என்ன நன்மை செய்வாய்? இத்தன்மையை யுடைய நினக்கு யாம் என்ன நன்மை செய்வேமென்றாள். எ - று. கட்குத்திக்கள்வன் என்றது, (1) 2“விழித்திருக்கமிண்டையைக் கொள்வான்” என்னும் பழமொழி. ஒ, அசை, நீ அம்மகளிரையும் அவர் கருத்து முற்ற நுகராது அவர்வருந் தநீங்கு வையென்பதுதோன்ற ‘நீயெவன்செய்தி’ என்றாள். 'யாமென செய்தும்' என்றது எம்மிடத்து நீங்காத அன்புடையையல்லை என்பது தோன்ற நின்றது. 52 | கொலையுண்கட் கூரெயிற்றுக் கொய்தளிர் மேனி யினைவனப்பின் மாயோய் நின்னிற் சிறந்தார் நிலவுலகத் தின்மை தெளிநீ வருதி மலையொடு மார்பமைந்த செல்வ னடியைத் (2)தலையினாற் றொட்டுற்றேன் சூள் |
எ - து: அதுகேட்டவன், கொலைத்தொழிலையுடைய கண்ணினையும் கூரிய எயிற்றினையும் கொய்யப்படுந் தளிர்போலும் நிறத்தினையும் கண்டார் வருந்தும் அழகினையுமுடைய மாயோளே! யான் விரும்புதற்கு உரியாராய் நின்னிற்காட்டிற் சிறந்தமகளிர் மண்ணுலகத்தில் இல்லாமையை நீதானே தெளிவாய்; இனி நீ நினைத்த தவறுக ளின்றென்று யான் தெளிவித்தற்கு நீ அணுக வருவாய்; மார்பு மலையோடு ஒப்பமைந்த திருமாலடியைத் தலையினாலே வணங்கிக் கையினாற் றொட்டுச் சூளுற்றேனென்றான். எ - று. 57 | 3ஆங்குணரார் நேர்ப வது பொய்ப்பாய் நீயாயிற் (3) றேங்கொள் பொருப்பன் சிறுகுடி யெம்மாயர் |
1. ‘விழித்திருக்கச் [சே] (செய்தே) விழியைக் கொண்டுபோய் விடுவான்’ என ஒருவன் திறமை மிகுதியைச் சிறப்பித்தற்கு வழங்கும் வாக்கியம் இப்பழமொழயின் பொருட்டென்று தோற்றுகிறது. 2. “தலைதொட்டேன் றண்பரங் குன்று” பரி. 6 : 95. 3. தலைவி மறுத்தெதிர்கோடலுக்கு, “தேங்கொள்....................குறி” என்பது மேற்கோள்; தொல். களவி. சூ. 20. இளம். (பிரதிபேதம்) 1 மாமனமருண்டு, 2 மிழித்திருக்க, 3 ஆங்குணர்வார்நேர்வவது.
|