20 | முயங்குநின் முள்ளெயி றுண்கு மெவன்கொலோ மாயப் பொதுவ னுரைத்த வுரையெல்லாம் வாயாவ தாயிற் றலைப்பட்டாம் பொய்யாயிற் சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின் னாயித ழுண்கண் பசப்பத் தடமென்றோள் சாயினு மேஎ ருடைத்து. |
இது வினைவலபாங்கிற் றலைவியை ஆற்றிடைக் கண்டு வினைவலபாங்கிற்றலைவன் விலக்கி நகையாடி இருவருஞ் சிலமொழி கூறியவழி அவள் கூட்டத்திற்கு உடம்பட்டது. இது (1) கைக்கிளை இதன் பொருள் (2)யாரிவ னென்னை விலக்குவா 1னீ (3)ருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் (4) கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு சொல்லலோம் பென்றா ரெமர் |
எ - து: என்னை விலக்கு வானாகிய இவன் எமக்கு என்ன உறவுடைய னென (5) முன்னிலைப்புறமொழியாகப் 2புலந்துகூறி, பின்னர் அவனைநோக்கி நீரிலே 3அசைகின்ற பொலிவையுடைய தாமரையினது
1. (அ) "கல்லாப் பொதுவனை நீமாறு" எனப்பொதுவியர் கூறலும் "நடாஅக் கரும்பமன்ற தோளாரைக் காணின், விடாஅலோம் பென்றா ரெமர்" எனப் பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய பெருந்திணை யாதலின் முல்லையுட் கோத்தாரென (தொல். அகத். சூ. 13.) உரையில் இவரே வேறு திணையாக எழுதியிருப்பது இங்கே ஆராயத் தக்கது. 2. தலைவன் சொல்லெதிர் தலைவி உடம்பாடிருப்பவும் இசைவில்லா தாரைப்போல அல்ல கூற்றுக் கூறுதற்கு, ‘யாரிவ னென்னை........... .....................ரெமர்‘ என்பதனை மேற்கோள் காட்டி, ‘எவன்கொலோ........................ ...........................ஏஎருடைத்து‘ என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று என்பர் இளம்பூரணர்; தொல். களவி. சூ. 16. 3. உளர்தல் - அசைதல். 4. "கல்லாக் கோவலர்" (ஐங். 304) என்பது இங்கு ஒப்புநோக்கற்பாலது. 5. ‘யாரைநீ யென்னை விலக்குவாய்’ என்னாது "யாரிவனென்னை விலக்குவான்" என்றது முன்னிலையிற் புறமாக மொழிந்தது. (பிரதிபேதம்)1நீருளபூந்தாமரை, 2புலாந்து, 3அசைக்கின்ற பூவையுடையதாமரை.
|