பக்கம் எண் :

நான்காவது முல்லை719

பூவை எமக்கு விளையாடத் தந்த, (1) பலமலர் விரவுதலையுடைத்தாகிய தாரினையுடைய, 1நினது சாதித்தன்மை கல்லாதபடி இயல்பாகப்பட்ட இடையனாந் தன்மையை உடையை; இவ்வொழுக்கம் அறிந்தாரைப்போல எம்முடைய சுற்றத்தார் நின்னோடு சிலசொல்லுதலைப் பாதுகாத்துக்கொள் என்றார்; ஆதலால் நீ ஈண்டு நில்லாது போ என்றாள். எ - று.

"எந்நில மருங்கிற் 2பூவும்" (2) என்பதனால், தாமரை கூறினார்.

5்எல்லா, கடாஅய (3) கண்ணாற் கலைஇயநோய் செய்யு
நடாஅக் (4) கரும்பமன்ற தோளாரைக் காணின்
விடாஅலோம் பென்றா ரெமர

எ - து: அதுகேட்டவன் ஏடி! வேட்கை செலுத்தின கண்ணாலே மனத்தைக் கலக்கின காமநோயை உண்டாக்கும் எழுதுகரும்பு நெருங்கின தோளினையுடைய மகளிரைக் கண்டாயாயிற் போகவிடாதே கொள் ; அவர் செய்த நோயை அவரைக் கொண்டே பரிகரித்துக்கொள்ளென்று கூறினார் எம்முடைய சுற்றத்தார் என்றான். எ - று.

கடாஅயார், நல்லாரைக் காணின் விலக்கி நயந்தவர்
பல்லித ழுண்கண்ணுந் தோளும் புகழ்பாட
நல்லது கற்பித்தார் மன்ற நுமர்பெரிதும்
வல்ல ரெமர்கட் செயல்

எ - து: அதுகேட்டவள் அங்ஙனம் பரிகரித்துக் கொள்ளென்று கூறினவர்கள் அதுவேயன்றி நல்ல மகளிரைக் கண்டாயாயிற் போகாமல் தடுத்து விரும்பி அவருடைய (5) பல பூக்களையும் போலுங் கண்ணையும் புகழப்படுந் தோளையும் பாடும்படியாக நல்லதொரு தொழில் கற்பித்தார்;


1. (அ) "பிடவமுங்.......................................கோடலும்............................................காயாவும் பிறவு மணிகொள மலைந்த கண்ணியர்" (ஆ) "மெல்லிணர்க் கொன்றையு மென்மலர்க் காயாவும், புல்லிலை வெட்சியும் பிடவுந் தளவுங், குல்லையுங் குருந்துங் கோடலும் பாங்கருங், கல்லவுங் கடத்தவுங் கமழ்கண்ணி மலைந்தனர்" கலி. 101 : 2 - 6 ; 103: 1 - 4 என்பவையும் இந்நூற்பக்கம் 638 : 2 - ஆம் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

2. தொல். அகத். சூ. 19.

3. இந்நூற்பக்கம் 706 : 3 - ஆங் குறிப்புப்பார்க்க.

4. "தோண்மேற், கரும்பெழுது தொய்யிற்கு" கலி. 63. 7 - 8 என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

5. பல பூக்களென்பதற்கு, மகளிர் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும செந்தாமரை, குவளை, கருநெய்தல், கருவிளை, நறாமுதலியமலர்களென்று

(பிரதிபேதம்)1சாதித்தன்மையைக்கல்லாதவடிவியல்பாக, 2பூவும்புள்ளும்.