1எ - து: மெல்லிய இயல்பினையுடையாய்! நம்யாட்டினத்தையுடைய (1) ஆயர்மகன் சூடிவந்ததொரு முல்லைத்தொடையினையும் அதனாற் 2செய்த தோர் (2) கண்ணியையுங் கூந்தலிலேயிட்டு மிகவும் 3முடித்தேன்; தோழீ ! அப்பூச் செவிலித்தாய் 4வெண்ணெய்தேய்க்கவிரித்த மயிரோடே நற்றாயுந் தந்தை முதலியோரும் இல்லிடத்தேயிராநிற்க நற்றாயுங் கெட்டுநாணும்படியாகச் செவிலிமுன்னே வீழ்ந்தது; ஆகையினாலே ( ) தோழீ! பிறர் காணாமையுண்ட (3) கள்ளின்களிப்பு மெய்யிடத்தே தோன்றி மிகுகையினாலே பின்னை நாணா மற்சென்று பிறர் நடுங்கும்படி அக்கடுங்கள்ளைத் தாமுண்டபடியை உரைத்தாற்போல 5நாம் கரந்தகளவொழுக்கமுங் கையோடே பிடித்துக்கொள்ளப் பட்டேங் காணென்றாள். எ - று. 10 | அதனை, 6வினவலுஞ் செய்யாள் சினவலுஞ் செய்யா ணெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடைப் போயினாள் யானுமென் சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த (4) பூங்கரை நீலக் தழீ இத் தளர்பொல்கிப் (5) பாங்கருங் கானத் தொளித்தே னதற்கெல்லா வீங்கெவ 7னஞ்சு வது |
எ - து: பின்னரும் அப்பூவை வந்தபடி என்னென்று கேட்டலுஞ் செய்யானாய்ச் சினத்தலுஞ் செய்யாளாய் நெருப்பைக் கையாலே தீண்டினவர்கள் 8அக்கையைப் பிதிர்க்கு மாறுபோலக் கையைப் பிதிர்த்து நீங்கிப் புறமாகிய புறத்தேபோனாள்; அவள்போனபின்பு யானும் என்னுடைய மயிர்ச்சந்தனம் பூசி உலர்த்தின மயிரை முடித்து நிலத்தே 9தாழ்ந்த பூத்தொழிலையுடைத் தாகிய கரையினையுடைய நீல ஆடையைக் கையாலே
1. (அ) ”முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்” பதிற். 21; 20. (ஆ) “முல்லையங் கண்ணிசிந்தக் கால்விசை முறுக்கியாய, ரொல்லென வொலிப்ப வோடி” சீவக. 43. 8. 2. “கூழையு ளேதிலான், கைபுனை கண்ணி முடித்தாள்” கலி. 107 : 14-15. 3. “மெய்க்கண், மகிழா னறிப நறா” நான்மணி. 79. 4. “பூங்கரை நீலம் புடைதாழ” கலி. 161: 3. 5. “பாங்கரும் பாட்டங்கால்” கலி. 116: 1. (பிரதிபேதம்)1எ - து: மெல்லியலாய் நம்மாட்டினத்தை, 2செய்தவழகினையுடைய கண்ணியையும், 3முடித்தேன் அப்பூ, 4வெண்ணைதேய்க்க. எண்ணெய்தேய்க்க ( ) தோழி, 5நாங்கரந்த ஒழுக்கமும், 6வினவலுஞ்சொல்லாள் சினவலுஞ் சொல்லாள், 7அஞ்சுவது அஞ்சல். எ - து: 8தங்கையைப், ஃசந்தனமெழுகி யுலர்த்தின, 9தாழ்ந்துபூத்தொழிலை.
|