8 | நீநீங்கு, கன்றுசேர்ந் தார்கட் கதவீற்றாச் சென்றாங்கு வன்கண்ண ளாய்வர லோம்பு; | 10 | யாய்வருக வொன்றோ பிறர்வருக மற்றுநின் கோவரினு மிங்கே வருக தளரேன்யா னீயருளி நல்கப் பெறின்; | 13 | நின்னையான் சொல்லினவும் பேணாய் நினைஇக் கனைபெய லேற்றிற் றலைசாய்த் தெனையதூஉ மாறெதிர் கூறி மயக்குப் படுகுவாய் கலத்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையா னாணிலி நீ. |
இது வினைவலபாங்கிற் றலைவியை ஆற்றிடைக்கண்டு 1விலக்கிய தலைவனோடு அவள் சில மொழிகூறிக் குறியிடங் கூறியது. இதன் பொருள். (1)பாங்கரும் (2) பாட்டங்காற் (3) கன்றொடு செல்வேமெந் 2தாம்பி னொருதலை பற்றினை யீங் (4) கெம்மை முன்னை நின் றாங்கே விலக்கிய வெல்லாநீ 3யென்னை (5) யே முற்றாய் விடு |
எ - து: மனைப் 4பக்கத்திற், பிறர் சேருதற்கரிய, நாம் பயிர் செய்யுந் தோட்டத்திடத்தேகன் றொடுபோகாநின்றேம் ; அங்ஙனம் போகின்ற எம்முடைய கையில் தாம்பின் ஒரு தலையைப் பிடித்தனையாய் எம்மை இவ்விடத்தே 5முன் பேயும் ஒருதர நின்று விலக்கினாற்போல விலக்குதற்கு, ஏடா! நீ என்ன பித்தேறினாய்? நீ என்னைப் போகவிடு என்றாள். எ - று
1. “பாங்கருங் கானத்து” கலி. 115: 15. 2. “பாட்டங்கால்” கலி. 111: 4. 3. “கன்றெல்லாந் தாம்பில்” கலி. 111: 1 - 2. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 4. “பேரேமுற்றார்போல முன்னின்று விலக்குவா, யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி” கலி. 113: 4 - 5. 5. இந்நூற்பக்கம் 723: 5- ஆங் குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்)1விலக்கியவத்தலைவனோடு, 2தாம்பிலொருதலை, 3என்னே முற்றா அயவிடு, 4பக்கத்திற்சேருதற்கரிய நாம்பயிரைச் செய்யும், 5முன்பேவுமொருத்தர் நின்று விலக்கினாரைப்போல.
|