எ - து: அதுகேட்டவள், யான் நின்னைப் போகவிடேன் ; தன்னைத் தீண்டுதற்குச் செல்லுமவர்களை இடையே விலக்கி எதிரே மிக்குச்செல்லுங் கடிய வலியினையுடைய நாகுபோலே செறுத்துநோக்கித் தொழுவின் வாயிலி னின்றும் போந்து நின்று பின்னைச் சினப்பா 4யென்றான். எ - று. 8 | நீநீங்கு, கன்றுசேர்ந் தார்கட் 5கத (3) வீற்றாச் சென்றாங்கு வன்கண்ண ளாய்வர லோம்பு |
எ - து: அதுகேட்டவள், நீ இவ்விடத்து நின்றும் போ; அதுவென்னெனில் தன்னுடைய கன்றைச் சேர்ந்தார்மேலே கோபத்தையுடைய புனிற்றாச் 6சென்றாற்போல நீ என்மேலே வந்தது காணில் யாய் தறுகண்மையை யுடையளாய் வந்துசீறுதலுமுண்டுகாண்; அவ்வரவை நீ பேணிக் 7கொள்வாயென்றாள். எ - று. 10 | யாய்வருக வொன்றோ பிறர்வருக மற்றுநின் கோவரினு மிங்கே வருக தள ரேன்யா (4) னீயருளி நல்கப் பெறின் |
1. வயாவென்பது வேட்கைப் பெருக்கத்தை யுணர்த்துமென்பதற்கு, “தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங், கடுவயா நாகுபோ னோக்கி” என்பதனை மேற்கோள்காட்டி, வயாவென்பது கன்றின்மேற் காதன்மிகுதி குறித்து நின்றதென்பர், தெய்வச்சிலையார்; தொல். உரி சூ. 57. ‘வயாவென்’ 2. எழுப்புதல் எடுப்புதலென வருதல்போல, தொழு, தொடுவென ழகரம் டகரமாய் வந்ததுபோலும். 3. (அ) ஈற்றா, அச்சப்பொருளில் ஒன்றாகக் (தொல். மெய்ப். சூ. 1) கூறப்பட்டிருத்தலும் (ஆ) “கடுஞ்சூலா நாகுபோ னிற்கண்டு நாளு, நடுங்கஞ ருற்றதென் னெஞ்சு” (கலி. 110: 14 -15) என்பதும் (இ) “கன்றமர் கறவை மான, முன்சமத் தெதிரிந்ததன் றோழற்கு வருமே” (புறம். 275: 8 - 9) என்பதும் ஈண்டு அறிதற்பாலன. 4. (அ) “நின்றோழி யென்னை, யருளீயல் வேண்டுவல்” (ஆ) “களிறன்னான் றன்னையொரு, பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ” (பிரதிபேதம்)1விடேன் தொடிய செல்வோர்த், 2வயாநாகுபோனோக்கிக் கொடுமையா, 3மற்று நீநீங்கு.எ - து: 4என்றான் தன் கன்று, 5கதவீற்றாய், 6சன்றாற்போல, செற்றாப்போல, 7கொள்ளென்றாள். யாய்.
|