10 | காணினி, தோட்டார் கதுப்பினென் றோழி யவரொடு காட்டுச்சார்க் கொய்த சிறுமுல்லை மற்றிவை முல்லை யிவையாயின் முற்றிய கூழையா யெல்லிற்றுப் போழ்தாயி னீதோளிக் கண்டேனாற் செல்லென்று நின்னை விடுவேன்யான் மற்றெனக்கு மெல்லியா தோரா வறிவு. |
1இஃது ஆற்றிடைத்தலைவன் தலைவியைக் கையதுவினாய்ச் சேர்ந்தது. இதன் பொருள். மாண வுருக்கிய நன் (1) பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன மேனியாய் (2) கோங்கின் முதிரா விளமுகை யொப்ப வெதிரிய |
1. “பொன்னுரை மணியன்ன மாமைக்கண்” (கலி. 48; 17.) என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன. 2. கோங்கு பாலைநிலத்துக்குரித்தாகக் கூறப்படுவது; பொரியரையுடை யது; வேனிற்காலத்து மலரும் இயல்பினது; தோகதச்செய்கையில் மகளிர்குதலை கேட்டு மலர்வதாகக் கூறப்படுவது. இம்மலர் பொன்னிறமும் விரிந்து தோன்றலுமுடையதாதலால, இதற்கு விளக்கும் பொற்கிண்ணமும் பொற்றட்டும் பொற்றரரசுத்தட்டும் பொற்குடையும் சுரிதகமென்னுமாபரணமும் உவமையாகக் கூறப்படுகின்றன. இவை (அ) “அலர்முலை யதரநே ரான கோங்கமு, மிலவமு மெல்லடி யினை வுறாவகைத், தலைவனோ டவ்வுழிச் சார்ந ரின்புற, நிலைபெறு பஞ்சியினெறிக டூர்க்குமே” எனவும் (ஆ) “பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ” எனவும் (இ) “திணிநிலைக் கோங்கம பயந்த, வணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே” (ஈ) “வேனிற் கோங்கின் பூம்பொகுட்டு” எனவும் (உ) “கோங்க மாதர் குதலையைக் கேட்டலுந், தேங்கொள் போது சினைதொறும் பூத்தலால்” எனவும் (ஊ) “பொன் போதலர் கோங் கோங்கு சோலை” எனவும் (எ) “கோங்கின், காலுறக் கழன்ற கண்கமழ் பனிமலர், கைவிடு சுடரிற் றோன்றும்” (ஏ) “செல்சுடர் நெடுங்கொடி போலப், பல்பூங் கோங்க மணிந்த காடே” எனவும் (ஐ) “வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்” எனவும் (ஒ) “கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப், பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச், செம்பொற்றட்டிற் றீம்பா லேந்திப், பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும்” எனவும் (பிரதிபேதம்)1இது ஆற்றிடைத்தலைவியை.
|