(1)தொய்யில் பொறித்த வனமுலையாய் மற்றுநின் கைய தெவன்மற் றுரை |
எ - து: மாட்சிமைப்பட உருக்கி ஓடவைத்த நல்ல பொன்னிலே நீலமணியை அழுத்திப் பேணி ஒப்பமிட்டாற்போன்ற கரிய நிறத்தையுடையாய்! முதிராத கோங்கினது இளைய முகையையொப்பத் தோன்றின தொய்யி லெழுதினவனமுலையையுடையாய்! பின்னை நின் கையிடத்தது யாதுதான் உரையென்றான். எ - று. 6 | கையதை, சேரிக் கிழவன் மகளேன்யான் மற்றிஃதோர் மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்ததோர் போழிற் புனைந்த வரிப்புட்டில் புட்டிலு ளென்னுள 1காண்டக்கா யெற்காட்டிக் காண் |
எ - து: அதுகேட்டவள், என் கையிடத்த, இச்சேரிக்குரிய இடையர் மகளாயிருப்பேன் யான், பின்னை என் கையில் இருக்கின்ற இது காதலை யுடைய புலைத்தி விற்கப்படுவதொன்றாக முடைந்ததொரு புட்டில்; அது தான் பின்பு பனங் குருத்தின் வகிராற் பொத்தின தொழிலையுடைய புட்டி லென்றாள். அதுகேட்டவன், (2) காட்சிதக்கவளே! இப்புட்டிலுள்ள என்ன பண்டங்களுள? அவற்றை எனக்குக் காட்டிக்கா 2ணென்றான். எ - று.
(ஓ) “பொன், செய் கன்னம் பொலிய வெள்ளி, நுண்கோ லறைகுறைந் துதிர்வன போல, வரவ வண்டின மூதுதொறுங் குரவத், தோங்குசினை நறுவீ கோங்கல ருறைப்ப” எனவும் (ஒள) “புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ” (ஃ) “குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே” (அஅ) “குடையவிழ்வன கொழுமலரின குளிர்களியன கோங்கம்” (ஆஆ)“கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன” எனவும் (இஇ) ”கைவல் வினைவன் றையுபு சொரிந்த, சுரிதக வுருவின வாகிப் பெரிய, கோங்கங் குவிமுகை யவிழ” எனவும் வருவன வற்றால் அறியலாகும். இதன்றாது பொன்னிறமுடைய தென்பது கலி. 33; 12 -ஆம். அடியானுணரப்படும். இதன் காய் சால்போன்ற தென்றும் பஞ்சுடையதென்றும் கூறுவர் ; இதன் அரும்பும் மகளிர் கொங்கையும் ஒன்றற்கொன்று உவமையாகக் கூறப்படுதலை இந்நூற் பக்கம் 244. 2-ஆம் குறிப்பால் உணர்க. 1. (அ) ”தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை” மது. 416. (ஆ) “தொய்யில் பொறித்த வனமுலை” (இ) “தொய்யில் பொறித்த வழி” கலி. 67: 12; 144: 34. 2. காண் - அழகுமாம். (பிரதிபேதம்)1காண்டக்காய் காட்டிக்காண், 2என்றான் தோட்டார்.
|