பக்கம் எண் :

746கலித்தொகை

தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை
முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்;
எனவாங்கு;
22 மாலையு மலரு நோனா தெம்வயி
னெஞ்சமு மெஞ்சுமற் றில்ல வெஞ்சி
யுள்ளா தமைந்தோ ருள்ளு
முள்ளி லுள்ள முள்ளு ளுவந்தே.

இது பிரிவிடையாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு அதனோடு புலம்பித் தோழிகேட்ப அதனொடு புலந்தது.

இதன் பொருள்.

(1)வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா
னல்லாற்றி னுயிர்காத்து நடுக்கறத் (2) தான்செய்த
தொல்வினைப் 1பயன் றுய்ப்பத் துறக்கம்வேட் 2டெழுந்தாற்போற்
(3)பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர
வானாது 3கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ
னேனையா னளிப்பான்போ லிகலிருண் 4மதிசீப்பக்

1. (அ) ‘’வென்றிப் பல்புகழ்’’ மலை. 544. (ஆ) ‘’மறம் வீங்கு பல்புகழ்’’ பதிற். 12 : 8. என்பவைகளும் (இ) இந்நூற்பக்கம் 145: 4ஆம் குறிப்பும் ஒப்புநோக்குக.

2. (அ) ‘’அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார், சிறந்தோ ருலகம் படருநர் போல’’ பரி. 19 : 10 - 11. (ஆ) ‘’விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்குந், துளங்கா விழுச்சீர்த் துறக்கம்’’ பரி. ‘வானார்’ 44 - 47.
(இ) ‘’புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே’’ (ஈ) ‘’எண்ணிய வின்ப மன்றித் துன்பங்களில்லை யான, புண்ணியம் புரிந்தோர் வைகுந் துறக்கமே போன்ற தன்றே’’ (உ) ‘’மாண்டதோர் நலத்திற் றாமென் றுணர்த்துதல் வாய்மைத் தன்றால், வேண்டிய வேண்டி னெய்தி வெறுப்பின்றி விழைந்த துய்க்கு, மீண்டரும் போக வின்ப மீறில தியாண்டுக் கண்டா, மாண்டது துறக்க மஃதே யருமறைத் துணிவு மம்மா’’ கம்ப. நகரப். 5. சவரிபிறப்பு. 1. கடறாவு. 94.

3. “கல் சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு” அகம். 120 : 5.

(பிரதிபேதம்)1பயன்றுய்ப்பான், 2உழந்தாற், 3கலிழ்கொண்ட, 4மதிசீய்ப்ப, மதிசிறப்ப.