யாய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட (1)காதலர்ப் 1புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் எ - து: அதற்குக் காரணம் என்னெனில், நமக்கு வலியில்லையாம்படி நம்மைத் துறந்தவரை நினைக்கையினாலே (2)கயங்கள்பூத்த போதுபோலே நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய அழகினையுடைய நலத்தை இகழ்கின்ற நீ அழகிய 2சிறகினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி முறுக்கு நெகிழ்ந்த கோட்டுப்பூப்போலே மன 3நெகிழ்ந்த காதலரைக் கூடியிருக்கின்ற மகளிருடைய அழகைப் போக்கமாட்டாயென்று அதன் மருட்சி கூறினாள். எ - று. 4இதனால், நீ வருந்தினவர்களை வருத்தியே விடுவையென்றும் 5மகிழ்ந்தவர்களை மகிழப்பண்ணியே விடுவையென்றும் அதன் அருளின்மைநோக்கி மருட்சியையுடைய மாலையாய் இருந்தாயென்றாள். இறுத்தந்தமாலாய்! நீ மருண்மாலையாய் இருந்தாயென மேல்வரும் ‘மாலைநீ’ என்பனவற்றையும் இங்ஙனங்கூட்டிப் பொருள்கூறிக்கொள்க. 13 (3)மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் | பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் | (4)செவ்வழியாழ் நரம்பன்ன 6கிளவியார் பாராட்டும் | பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலங் கடிகல்லாய் |
எ - து: கோவலருடைய தனித்தகுழலோசை தையென்னும் ஒசைப்பட ஒலிப்ப அதுகேட்டுக் குறைந்த நெஞ்சத்தை 7யுடையேம் பக்கத்தேநின்று
என வருபவையும் வலியுறுத்தும். (எ) “தூவறத் துறத்தல்” கலி. 129 : 9ஆம் அடிக்குறிப்புப் பார்க்க. 1. ‘’தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக், காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்த, ................மாலைவந் திறுத்தென’’ சிலப். 4 : 13 - 20. 2. (அ) ‘’கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற கூம்பாது, வேட்டதே வேட்டதா நட்பாட்சி - தோட்ட, கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற் கூம்பு வாரை, நயப்பாரு நட்பாருமில்’’ நாலடி. 215. (ஆ) ‘’உலகந்தழீஇய தொட்ப மலர்தலுங், கூம்பலு மில்ல தறிவு’’ குறள். 425. (இ) ‘’நலமிக வுயர்ந்தோர் தம்மை நண்புறத் தழுவிக்கொள்க, நிலவிய கயத்துப் பூவை நிகர்தரா துயர்ந்த கோட்டி, னலரென வவர்பானிற்க வாக்கமிக் கடுத்த காலை, மலர்வதும் வறங்கூர் காலைக் கூம்பலுமொழிக மைந்தா’’ விநாயக. அரசியற்கை. 51. 3. ஞாயிறு முதலியன சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லி யமையப் பெறுமென்புழி, கேட்குநபோலப் பொழுதொடு (பிரதிபேதம்)1புணர்ந்தவர்க்காரிகை, 2சிறையினையுடைய, 3நெகிழ்ந்து காதலரை, 4இதனால் வருந்தின, 5மகிழ்ந்தவரை, 6கிளவியார்ப் பாராட்டும், 7உடையே முடைய பக்கத்தே.
|