உயிரைக்கொள்ளாதே வினோதித்துப் பாராட்டுகின்ற நீ தங்கணவர் பிரிந்த காலத்துச் (1) செவ்வழியென்னும் பண்ணையுடைய யாழினது நரம்போசை போலவருந்திக்கூறும் மொழியினையுடையமகளிர் அக்கணவர் (?) 1வருந்தின எம்போற் (2) கனவிற் புணர்ச்சியின்றிப் பாராட்டப்படும் நனவிற்புணர்ச்சியிற் பெற்ற புதியநலத்தைக் கடியமாட்டாய். எ - று. 17 மாலைநீ, 2தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் 3பகைமிக்க நெஞ்சத்தேம் 4புன்மைபா ராட்டுவாய் தலைமிக்க 5புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய் எ - து: அழகு மிக்க தாழ்ந்த சினைகளில் தமக்கிருப்பிடத்தே (3) பேடுஞ் சேவலுமாகச் சேர்ந்து பறவைகள் ஆரவாரியாநிற்க, மற்றுள்ள பகைகளாலும் வருத்தமிக்க நெஞ்சத்தினை 6யுடையேம் புன்மையையாங்கள் இறந்துபடாத படி பண்ணி வினோதித்துப் பாராட்டுகின்றநீ அழகு மிக்ககூட்டத்தையுடைய 7மகளிரது தாழ்ந்த கொடியினையுடைய நறிய முல்லையினுடைய முகையின் முகத்தை வண்டுகள் திறந்தாற்போல ஆடவரால் திறக்கப்படும் முறுவலையுங்கடியமாட்டாய். எ - று. 8எனவாங்கு அசை. 22 9மாலையு மலரு நோனா தெம்வயினெஞ்சமு மெஞ்சுமற் றில்ல வெஞ்சி10யுள்ளா தமைந்தோ ருள்ளு முள்ளி லுள்ள முள்ளு ளுவந்தே
கூறியதற்கு, ‘’மாலைநீ, தையெனக் கோவலர்.....................பக்கம்பா ராட்டு வாய்’’ என்பதுமேற்கோள்; தொல். செய். சூ. 190. ‘ஞாயிறு’ இளம். 1. ‘’நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே, கனவிற்புணர்ச்சி கடிதுமா மன்றோ’’ கலி. 39 : 35 - 36. 2. (அ) ‘’என் கிளவிபோற் செவ்வழி யாழிசை’’ கலி. 143 : 38. (ஆ) ‘’செவ்வழி நல்யா, ழிசையோர்த் தன்ன வின்றீங் கிளவி, யணங்குசா லரிவையை’’ அகம். 212 : 6 - 8. 3. பேடென்பது பெண்பறவையென்னும் பொருளில் இவருரைகளிலும் கம்பர் வில்லிபுத்தூராழ்வார் குமரகுருபர சுவாமிகள் சீகாழி அருணாசலக் கவிராயர் முதலியவர் செய்யுட்களிலும் வந்துள்ளது. (பிரதிபேதம்)1வருந்தின் எம்போற், 2தலைமிகத்தாழிசை, 3புரிமிக்க. 4பன்மைபாராட்டுவாய், 5புணர்ச்சியாற்றாழ், புணர்ச்சியாய்தாழ், 6உடையேமுடைய பன்மையை, 7மகளிருடைய தாழ்ந்த, 8ஆங்க, மாலை, 9மனையுமலகு, 10உள்லஞ்சமைந்தோருள்ள முள்ளினுள்ள.
|